Monday, July 14, 2025
Home Blog Page 3383

மீண்டும் ஒரு கல்லூரி மாணவி தற்கொலை! காரணம் என்ன போலீசார் தீவிர விசாரணை!

மீண்டும் ஒரு கல்லூரி மாணவி தற்கொலை! காரணம் என்ன போலீசார் தீவிர விசாரணை!

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள இளம்புவனம் செட்டியார் தெருவை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியம். இவரது மகள் முத்தம்மாள் (18). இவர் கோவில்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் வணிகவியல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் முத்தம்மாள் கல்லூரிக்கு சென்று வீடு திரும்பிய நிலையில் வீட்டில் சோகமாகவே காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து முத்தம்மாள் வீட்டின் மாடிக்குச் சென்றுள்ளார். மாடியில் உள்ள அறையில் மின்விசிறியில் அவரது துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். முத்தம்மாளை காணவில்லை என பெற்றோர்கள் வீடு முழுவதும் தேடிய நிலையில் மாடியில் தூக்கில் தொங்கியுள்ளார். அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் எட்டயபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அந்த தகவலின் பேரில் எட்டயபுரம் போலீசார் மாணவியின் வீட்டிற்கு விரைந்து வந்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி தற்கொலை செய்து கொண்டதன் காரணம் என்ன என்பதை விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி படிக்கும் மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அமீர்கானின் லால் சிங் சத்தா படத்தை இணையத்தில் வெளியிட்டவர்கள் கைது

0

அமீர்கானின் லால் சிங் சத்தா படத்தை இணையத்தில் வெளியிட்டவர்கள் கைது

அமீர்கான் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆன லால் சிங் சத்தா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

அமீர்கான் நடிப்பில் லால் சிங் சத்தா திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி வியாழக் கிழமை ரிலீஸ் ஆனது. இது 1994 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் டாம் ஹான்ங்ஸ் நடிப்பில் வெளியாகி உலகம் முழுவதும் பல விருதுகளை பெற்றுக் குவித்த “ஃபாரஸ்ட் கம்ப்” என்ற படத்தில் இது பெரிய அதிகாரபூர்வ ரீமேக் ஆகும்.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் எதிர்பார்த்த வசூலை ஈட்டவில்லை. படமும் பொறுமையை சோதிக்கும் விதமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்தியா முழுவதும் வெளியான படம், கிட்டத்தட்ட ஒரு பிராந்திய திரைப்படத்தின் முதல் நாள் வசூலைக் கூட ஈட்டவில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் வசூலை மேலும் பாதிக்கும் விதமாக படத்தின் பைரஸி வடிவம் சில இணையதளங்களில் வெளியானது. இதையடுத்து படத்தயாரிப்பு நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில் பெங்களூருவில் படத்தை வெளியிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்த கேமரா மற்றும் கணினி போன்ற பொருள்களும் கைப்பற்றப் பட்டுள்ளன. இவர்கள் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையதளங்களோடு தொடர்பில் இருப்பவர்கள் என சொல்லப்படுகிறது.

படத்தின் மோசமான வசூலுக்கு மற்றொரு காரணமாக 2015 ஆம் ஆண்டு அமீர்கான் இந்தியாவில் சகிப்பின்மை அதிகமாகியுள்ளது எனக் கூறியதற்காக இப்போது அவரின் படத்தை புறக்கணிக்கவேண்டும் என சமுகவலைதளங்களில் ஹேஷ்டேக்குகள் உருவாக்கப்பட்டு பரப்பப்பட்டதும் காரணம் என சொல்லப்படுகிறது.

சந்தோஷ் நாராயணனோடு பெரிய சண்டை இல்லை… இயக்குனர் பா ரஞ்சித் பதில்!

0

சந்தோஷ் நாராயணனோடு பெரிய சண்டை இல்லை… இயக்குனர் பா ரஞ்சித் பதில்!

இயக்குனர் பா ரஞ்சித் கடந்த சில படங்களாக அவரின் ஆஸ்தான இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணனை விலக்கியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக பா.ரஞ்சித் இருந்து வருகிறார்.இவர் இதுவரை தமிழில் ஐந்து திரைப்படங்களை இயக்கி உள்ளார்.ஆனால் குறுகிய காலத்திலேயே இவரின் திரைப்படங்கள் அதிக அளவில் பேசப்பட்டன.மேலும் வெற்றியும் பெற்றன.இதற்குக் காரணம் இவரின் படங்கள் அரசியல் சார்ந்து இருக்கும்.2012ம் ஆண்டு இவர் இயக்கிய அட்டகத்தி திரைப்படம் மூலம் இவர் இயக்குனராக அறிமுகம் ஆனார்.

இவரின் முதல் ஐந்து படங்களுக்குமே இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன்தான் பணியாற்றினார். இருவரின் கூட்டணியில் உருவான பாடல்கள மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. ஆனால் சார்பட்டா பரம்பரைக்கு பிறகு இந்த கூட்டணி பிரிந்தது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாகவே இந்த கூட்டணி பிரிந்ததாக சொல்லப்படுகிறது.

நட்சத்திரம் நகர்கிறது படத்துக்கு தென்மாவும், விக்ரம் படத்துக்கு ஜி வி பிரகாஷும் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளனர். இந்நிலையில் தற்போது பா ரஞ்சித் அளித்துள்ள நேர்காணல் ஒன்றில் சந்தோஷ் நாராயணன் உடனான சண்டை குறித்து பேசியுள்ளார். முன்னணி ஊடகத்துக்கு அளித்த நேர்காணலில் “இருவரும் இணைந்து 5 படங்களில் பணியாற்றியுள்ளோம். வேறு கலைஞர்களோடு பணியாற்ற வேண்டும் என நான் ஆசைப்பட்டேன். அதற்காக நாங்கள் இணைந்து பணியாற்றவே மாட்டோம் என்றில்லை. அந்த அளவுக்கு நாங்கள் சண்டையிடவில்லை. நான் அழைத்தால் அவர் என் படத்தில் பணியாற்றுவார் என்றுதான் நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

திருச்சிற்றம்பலம் முதல் நாள் வசூல் இவ்வளவா? வெளியான பாக்ஸ் ஆபீஸ் தகவல்!

0

திருச்சிற்றம்பலம் முதல் நாள் வசூல் இவ்வளவா? வெளியான பாக்ஸ் ஆபீஸ் தகவல்!

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

பத்தாண்டுகளுக்குப் பிறகு தனுஷுடன் இயக்குனரும் அவரின் நண்பருமான  மித்ரன் இணைந்து உருவாக்கியுள்ள ‘திருச்சிற்றம்பலம்’ படம் வெற்றிக்கூட்டணியின் அடுத்த வெற்றியாக அமைந்துள்ளது. ஐந்தாண்டு இடைவெளிக்குப் பின்னர் தனுஷ் & அனிருத் கூட்டணியும் இந்த படத்தில் இணைந்துள்ளது.

தனுஷ் நித்யா மேனன், ராஷி கண்ணா மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோருடன் கலர்புல் இசை குடும்ப செண்டிமெண்ட் படமாக திருச்சிற்றம்பலம் உருவாகியுள்ளது. திருச்சிற்றம்பலம படத்தில் தனுஷ் மற்றும் நித்யா மேனன் அவர்களின் சிறப்பான நடிப்பிற்காக நல்ல விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்று வருகின்றனர். இதன் மூலம் இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் அமோகமாகத் தொடங்கியுள்ளது. வர்த்தக அறிக்கைகளின்படி, திருச்சிற்றம்பலம் முதல் நாளில் 8 முதல் 9 கோடி வரை வசூலித்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

தாய் மற்றும் தங்கையின் மரணத்துக்கு தன்னுடைய தந்தைதான் காரணம் என நினைக்கும் இளைஞனின் போராட்ட வாழ்க்கையை பீல்குட்டாக சொல்லியுள்ளது இந்த திரைப்படம். தாத்தா, தந்தை & மகன் ஆகியோருக்கு இடையிலான பாசப் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. படத்தில் தனுஷின் தந்தையாக பிரகாஷ் ராஜ் நடித்துள்ளார். இருவருக்கும் இடையே நடக்கும் மோதல் மற்றும் பாசப் போராட்டமே கதைக்களமாக இருக்கும் என தெரிகிறது.

இந்நிலையில் 90 களில் வெளிவந்த பிரியாத வரம் வேண்டும் போன்ற படங்களை நினைவூட்டும் வகையில் இந்த படம் இருப்பதாகவும் கருத்துகள் எழுந்துள்ளன.

முகத்தை அழகாக்க பியூட்டி சலூனிற்கு சென்ற சிறுவன் மருத்துவமனையில் அனுமதி! போலீசார் வழக்கு பதிவு!

முகத்தை அழகாக்க பியூட்டி சலூனிற்கு சென்ற சிறுவன் மருத்துவமனையில் அனுமதி! போலீசார் வழக்கு பதிவு!

கோவை மாவட்டம் ஆர் எஸ் புரத்தில் ராக் மென்ஸ் பியூட்டி சலூன் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பியூட்டி சலூனிற்கு தினமும் வாடிக்கையாளர்கள் வந்த வண்ணம் இருப்பார்கள். மேலும் அந்த சலூன்னிர்க்கு சம்பவத்தன்று 15 வயது சிறுவன் சென்றுள்ளான். அங்கு கொதிக்கும் நீராவியை கொண்டு சிறுவனின் முகத்தை சுத்தம் செய்துள்ளனர்.

அப்போது கொதிக்கும் நீராவியானது சிறுவனின் முகத்தில் பட்டது. அதில் முகம் முழுவதும் காயம் ஏற்பட்டு அந்த சிறுவன் அலறி துடித்துள்ளான். அக்கம் பக்கத்தினர் அந்த சிறுவனை மீட்டு  மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தனர். அங்கு சிறுவனின் காயத்திற்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து சிறுவனின் தந்தை விஜயகுமார் ஆர் எஸ் புரம் போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அந்த பகுதியில்  சிறிது நேரத்திற்கு பெரும் பரபரப்பு நிலவி காணப்பட்டது.

ஆசியக் கோப்பையில் இந்தியாவை வெல்ல எங்களுக்கு இருக்கும் சாதகமான அம்சம்… பாக் வீரர் கருத்து

0

ஆசியக் கோப்பையில் இந்தியாவை வெல்ல எங்களுக்கு இருக்கும் சாதகமான அம்சம்… பாக் வீரர் கருத்து

பாகிஸ்தான் வீரர் சர்பராஸ் அகமது இந்தியாவை எளிதாக வெல்வது குறித்து பேசியுள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளின் அரசியல் காரணங்களுக்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இரு தரப்பு போட்டிகளில் விளையாடுவதில்லை. ஆனால் ஐசிசி நடத்தும் தொடர்களில் மோதுகின்றன. கடந்த ஆண்டு நடந்த டி 20 தொடர் உலகக்கோப்பையில் இரு அணிகளும் மோதின. அதையடுத்து மீண்டும், 10 மாதங்களுக்கும் மேலாக, இந்த இரு அணிகளும் ஆகஸ்ட் 28 (ஞாயிற்றுக்கிழமை) அன்று துபாயில் ஆசியக்கோப்பை தொடரில் விளையாட உள்ளன.

கடந்த சில ஆண்டுகளாக இந்திய மற்றும் பாகிஸ்தான் போட்டிகள் துபாயில்தான் நடந்துள்ளன. ஐபிஎல்லின் 2020 மற்றும் 2021 போட்டிகள் வளைகுடா நாட்டில் நடந்தது, இது இந்திய வீரர்களுக்கு அங்குள்ள நிலைமைகளுடன் பழகுவதற்கு போதுமான வாய்ப்புகளை வழங்கியது. மேலும் பாகிஸ்தானுக்கு, சர்வதேச கிரிக்கெட் இறுதியாக தங்கள் நாட்டிற்கு திரும்புவதற்கு முன்பு பல ஆண்டுகளாக துபாய் மைதானங்கள் சொந்த மைதானமாக செயல்பட்டது.

இந்த அம்சம் தங்களுக்கு இந்தியாவுக்கு எதிரான போட்டியை வெல்ல சாதகமான அம்சமாக இருக்கும் என பாகிஸ்தான் வீரர் சர்பராஸ் அகமது தெரிவித்துள்ளார். அவர் “எந்தவொரு தொடரின் முதல் போட்டியும் அந்த தொடருக்கான முன்னோட்டமாக அமைக்கிறது. எங்கள் முதல் ஆட்டம் இந்தியாவுக்கு எதிரானது. நிச்சயமாக, எங்கள் மன உறுதி அதிகமாக இருக்கும், ஏனென்றால் நாங்கள் கடைசியாக சந்தித்தபோது, ​​​​பாகிஸ்தான் அதே இடத்தில் இந்தியாவை தோற்கடித்தது.அந்த மைதான சூழல்கள் பாகிஸ்தானுக்கு மிகவும் பரிச்சயமானது. இங்கு பாகிஸ்தான் பிஎஸ்எல் மற்றும் ஏராளமான சொந்தத் தொடர்களில் விளையாடியது. இந்தியா இங்குள்ள ஐபிஎல்லில் விளையாடியுள்ளது, ஆனால் இந்த நிலைமைகளில் விளையாடிய அனுபவம் அவர்களுக்கு இல்லை” என்று அவர் கூறியுள்ளார்.

மணப்பாறை அருகே தன் ஆசை எல்லாம் முடித்துவிட்டு!.. பாதியில் கழட்டி விட்ட காதலன்!..

மணப்பாறை அருகே தன் ஆசை எல்லாம் முடித்துவிட்டு!.. பாதியில் கழட்டி விட்ட காதலன்!..

மணப்பாறை அடுத்துள்ள கே.புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் தான் சசிகலா.இவர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று ஒரு புகார் மனுவை கொடுத்தார். அந்தப் புகாரில் திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுக்கா கருணாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தான் அபிமணி இவரை நான் ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்தேன்.

நாங்கள் இருவரும் வெவ்வேறு சாதி என்பதால் வீட்டில் கூறினால் திருமணம் செய்து வைக்க மாட்டார்கள் என எண்ணி ஒரு முடிவை எடுத்தோம்.அந்த முடிவில் இருவரும் கோவிலில் சென்று திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்தோம்.

அதன்படி அபிமணியின் நண்பர்கள் மற்றும் அவரது உறவினர்கள் எங்களை அழைத்துச் சென்று சாணிப்பட்டி விநாயகர் கோவிலில் திருமணம் செய்து வைத்தனர். பின் அவரது உறவினர் மூலமாக அவரக்குறிச்சியிலுள்ள ஒரு வீட்டில் வைத்து என்னுடன் பாலியல் உறவு கொண்டார்.

அதன் பிறகு இருபது நாட்களுக்குப்பிறகு வையம்பட்டி காவல் நிலையத்திலிருந்து எங்களை அழைப்பதாக கூறி என்னிடமிருந்த தொலைபேசி மற்றும் நான் கையில் வைத்திருந்த பத்தாயிரம் ரூபாய் பணமும் மற்றும் ஆதார் கார்டையும் வாங்கிவிட்டு வலுக்கட்டாயமாக என்னை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர் அவரது உறவினர்கள்.

இந்த காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் நல்லதம்பி என்னை குடும்பத்தினருடன் வீட்டிற்கு திரும்பிச் செல்லுமாறு வற்புறுத்தினார். அதற்கு நான் போகமாட்டேன் என்று கூறினேன். வலுக்கட்டாயமாக என்னை குடும்பத்தாரர்களுடன் அனுப்பி வைத்தனர்.

சதி திட்டம் செய்து என்னை திருமணம் செய்து என்னுடன் பாலியல் உறவு கொண்டு பின்னர் என்னை சாதி பெயரை சொல்லி விலக்கி வைத்த என்னுடைய கணவன் அபிமணி மற்றும் அவருக்கு உதவி செய்த நண்பர்கள், சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து தக்க தண்டனை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என சசிகலா அப்புகார் மனுவில் தெரிவித்துள்ளார். இதனால் சிறிது நேரம் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கோலி ஃபார்முக்கு திரும்ப பிராட்மேன் வழியை மேற்கொள்ள வேண்டும்… மூத்த வீரர் அறிவுரை

0

கோலி ஃபார்முக்கு திரும்ப பிராட்மேன் வழியை மேற்கொள்ள வேண்டும்… மூத்த வீரர் அறிவுரை

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி குறித்து மூத்த வீரர் சந்து போர்டே பேசியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்திய அணியின் நட்சத்திர வீரர் கோஹ்லி குறித்த விமர்சனங்கள் பல்வேறு தரப்பில் இருந்து வந்து கொண்டிருக்கின்றன. இதற்கு முக்கியக் காரணம் கோஹ்லி கடந்த 2 ஆண்டுகளாகவே மோசமான ஆட்டத்திறனில் இருக்கிறார். அவர் சர்வதேச போட்டிகளில் சதமடித்து சில வருடங்கள் (100 இன்னிங்ஸ்களுக்கு மேல்) ஆகிவிட்டன. விரைவில் அவர் மீண்டும் பழைய கோலியாக திரும்பி வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

முன்னாள் இந்திய பயிற்சியாளர் சந்து போர்டே இதுகுறித்து கோலிக்கு அறிவுரை சொல்லும் விதமாக பேசியுள்ளார். அதன்படி, 1969 ஆம் ஆண்டு இந்தியாவின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை நினைவு கூர்ந்த அவர் அந்த நேரத்தில் ஆஸி.யின் கேப்டன்  கடினமான காலத்தில் இருந்ததாகவும் அவருக்கு ஜாம்பவான் கிரிக்கெட்டர் டான் பிராட்மேன் ஒரு யோசனை வழங்கியதன் வழியாக பார்முக்கு மீண்டு வந்ததாகவும் கூறியுள்ளார். அவருக்கு பயிற்சி அமர்வில் ஒவ்வொரு பந்தையும் அடிக்குமாறு பிராட்மேன் அறிவுறுத்தினார். பிராட்மேனின் அறிவுரைகள் ஆஸ்திரேலிய கேப்டனுக்கு பெரிதும் உதவியது என்றும், அவர் இந்திய அணிக்கு எதிராக சதம் அடித்ததாகவும் அவர் கூறினார்.

இதுபற்றி போர்டே “நாங்கள் 1968 இல் ஆஸ்திரேலியா சென்றோம். அவர்களின் கேப்டன் ஒரு மோசமான பார்மில் இருந்தார். பயிற்சி அமர்வில் ஒவ்வொரு பந்தையும் அடிக்குமாறு சர் டான் பிராட்மேன் அறிவுறுத்தினார். அதன் பிறகு அவர் களத்தில் இறங்கி எங்களுக்கு எதிராக சதம் அடித்தார்,” என்று போர்டே கூறினார். கோலியும் இப்போது அதைதான் செய்யவேண்டும்.

மேலும் அவர் “கவாஸ்கர் முதல் டெண்டுல்கர் மற்றும் நானும், ஒவ்வொரு வீரரும் இதுபோன்ற காலகட்டத்தை கடந்து செல்ல வேண்டும். நீங்கள் ஒரு எளிய பந்தில் அவுட், சிறந்த ஷாட் ஆடிய பிறகும் அவுட். இந்த சூழ்நிலையை சமாளிக்க எந்த நிபந்தனை சிகிச்சையையும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை,” என்று போர்டே மேலும் கூறினார்.

பாத்திரத்தை ஹெல்மெட்டாக அணிந்த ஒன்றரை வயது குழந்தை! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

பாத்திரத்தை ஹெல்மெட்டாக அணிந்த ஒன்றரை வயது குழந்தை! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

ராமநாதபுரம் மாவட்டம் கிளாக்குளத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி வனிதா. இவர்களுக்கு ஒன்றரை வயதில் அஜித் என்ற குழந்தை உள்ளது. வழக்கம்போல் அஜித் சமையலறையில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது சிறிய பாத்திரம் ஒன்றை தலையில் வைத்து அங்கும் இங்கும் ஓடி விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக அந்த பாத்திரம் அஜித்தின் தலையில் மாட்டிக் கொண்டது.

மேலும் அஜித்தின் அலறல் சத்தம் கேட்டு பெற்றோர்கள் சமையலறைக்குள் சென்று பார்த்தனர். அப்போது  அங்கு அஜித்தின் தலையில் பாத்திரம் சிக்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் அந்த பாத்திரத்தை அகற்ற முயற்சி செய்தனர்.  அந்த முயற்சி தோல்வி அடைந்ததால் பரமக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு குழந்தை அஜித்தை அழைத்துச் சென்றனர்.

அதனையடுத்து அங்கு சுமார் ஒரு மணி நேரம் தீயணைப்பு வீரர்கள் குழந்தையின் தலையில் உள்ள பாத்திரத்தை அகற்றுவதற்காக போராடி பின் மெதுவாக குழந்தையின் தலையில் இருந்த பாத்திரம் வெட்டி எடுக்கப்பட்டது. அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் குழந்தையை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உக்ரைனில் தொடங்கப்பட்ட நேரடி வகுப்புகள்! கலக்கத்தில் இந்திய மாணவர்கள்!

0

ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் தன்னுடைய அண்டை நாடான உக்ரைன் மீது திடீரென்று போர் தொடுத்தது இந்த நிலையில் போர் கடுமையாக நடைபெற்றதால் அங்கு இருக்கக்கூடிய மருத்துவக் கல்லூரிகள் திடீரென மூடப்பட்டனர். ஆனால் தற்போது அங்கே மீண்டும் மருத்துவ கல்லூரிகள் நேரடி வகுப்புகளை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது இதனால் இந்தியாவிற்கு தொடர் திரும்பியிருந்த மருத்துவ மாணவர்கள் கலக்கத்தில் இருக்கிறார்கள்.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்கரையின் மீது கடந்த பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி ரஷ்யா போர் தொடுத்தது அந்த போர் தற்போது வரையில் நீடித்து வருகிறது இரு நாடுகளுக்கும் இடையிலான போர் உச்சத்தில் இருந்தபோது கடந்த மார்ச் மாதத்தில் அங்கே மருத்துவம் படித்து வந்த 20 ஆயிரம் இந்திய மாணவர்களை மத்திய அரசு பத்திரமாக மீட்டு வந்தது நடைபெற்று வருவதால் ஆறு மாதங்களுக்கு மேலாக இந்த மாணவர்கள் இணையதளம் மூலமாகவே படித்து வந்தார்கள்.

இதற்கு நடுவே இந்தியாவில் இருக்கின்ற மருத்துவ கல்லூரிகளில் தாங்கள் படிப்பை தொடர வாய்ப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உக்கரையிலிருந்து நாடு திரும்பிய இந்திய மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர் இதுகுறித்து வழக்குகளும் நீதிமன்றங்களில் விசாரணையில் இருந்து வருகின்றன.

ஆனாலும் வெளிநாட்டு பல்கலை கழகங்களுக்கு படிக்கும் மாணவர்களுக்கு இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் மருத்துவ படிப்பை தொடர்வதற்கான அனுமதியை வழங்குவதற்கு வாய்ப்பில்லை என மத்திய அரசு தெரிவித்து வருகிறது இந்த நிலையில் மறுபடியும் நேரடி வகுப்புகள் தொடங்க உள்ளதாகவும் தேர்வுகள் நடத்த உள்ளதாகவும் உக்கிரன் கல்லூரிகள் அறிவித்திருக்கின்றன இது இந்தியாவைச் சார்ந்த மாணவர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக உக்கிரேனில் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் தெரிவித்ததாவது கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இணையதளம் மூலமாக படித்து வந்தோம் இந்த நிலையில் எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்து மறுபடியும் நேரடி வகுப்புகள் துவங்க உள்ளதாக உக்கரை மருத்துவக் கல்லூரியில் தெரிவித்துள்ளனர் அதோடு அக்டோபர் மாதத்தில் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான மருத்துவ தகுதி தேர்வான குரோக்-1 நேரடியாக நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் அங்கே தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது இருந்தாலும் உட்கார்ந்தின் தலைநகர் உள்ளிட்ட நகரங்களில் அமைதி நிலவி வருவதால் நேரடி வகுப்புகளிலும் நேரடி தேர்விலும் பங்கேற்கும் ஆறு கல்லூரிகள் தெரிவிக்கின்றன இதனால் உயிரை பணயம் வைத்து மறுபடியும் சொல்வதாய் என்ற குழப்பம் எங்களுக்கு உண்டாக இருக்கிறது பெற்றோரும் அச்சத்தில் இருக்கிறார்கள்.

இந்த வருடம் தேர்வு எழுத விட்டால் அடுத்த வருடத்தில் எழுதிக் கொள்ள முடியும் ஆனால் ஏற்கனவே வகுப்புகளை எழுந்துள்ள நிலையில் மேலும் ஒரு வருடத்தை இழக்க வேண்டுமா என்ற குழப்பமும் ஏற்பட்டுள்ளது என்று அவர்கள் தெரிவித்து வருகிறார்கள்.