திங்கட்கிழமை, டிசம்பர் 15, 2025
Home Blog Page 5666

தமிழக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 309 ஆக உயர்வு! டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட நபர்களுக்கு சிகிச்சை.!!

0

தமிழக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 309 ஆக உயர்வு! டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட நபர்களுக்கு சிகிச்சை.!!

உலக நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் கலந்துகொண்ட 1,103 பேர் தாமாகவே முன்வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட பலருக்கு கொரோனா பாதிப்பு அறிகுறி இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அவர்களாகவே முன்வந்து மருத்துவமனைக்கு வந்துள்ளனர். இவர்களில் முதற்கட்டமாக 658 பேருக்கு மாதிரிகள் எடுக்கப்பட்டது. மேலும் மற்ற நபர்களுக்கும் மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 190 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் 110 நபர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாவர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 234 ஆக நேற்று அறிவிக்கப்பட்டது. மேலும் கொரோனா அறிகுறி இருந்தவர்களுடன் பழகிய நபர்கள் இருப்பின் அவர்களாகவே முன்வந்து பரிசோதனை செய்து கொள்ளுமாறு சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார்.

டெல்லி மாநாட்டில் பங்கேற்ற இஸ்லாமிய நபர்களில் 1,103 பேருக்கு பரிசோதனை நடந்துள்ளது. இதில் கலந்து கொண்டவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு நபர்களுகும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வீட்டு கண்காணிப்பில் 86,342 நபர்களும் அரசின் கண்காணிப்பில் 90 நபர்களும் கண்காணிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தின் கொரோனா பாதிப்பு 234 ல் இருந்து 309 ஆக கூடியுள்ளது. தமிழகத்தின் கொரோனா தீவிரமடைந்து வருவது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,069 ஆக் அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் 53 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா நிவாரணம் 1000 வேண்டாம் என்பவர்கள் இணையத்தில் தெரிவிக்கலாம்! – தமிழக அரசு

0

கொரோனா நிவாரணம் 1000 வேண்டாம் என்பவர்கள் இணையத்தில் தெரிவிக்கலாம்!
– தமிழக அரசு

கொரோனா நிவாரண தொகை வேண்டாம் என்பவர்கள் இணையத்தில் தெரிவிக்கலாம் என்று தமிழக அரசு கூறியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்து வருகிறது. இதன் காரணமாக மக்களின் நலனை கருத்தில் கொண்டு, அரசு ஒவ்வொரு ரேசன் அட்டைக்கும் ரூ.1,000 மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் கூறினார். இதனோடு ஏப்ரல் மாதத்திற்கு தேவையான அரிசி, எண்ணெய், பருப்பு, கோதுமை, சர்க்கரை போன்ற உணவுப் பொருட்கள் உட்பட  இலவசமாக வழங்கப்படும் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைகளுக்கான ரூ.1,000 கொரோனா நிவாரண நிதி நேற்று முதல் சிறப்பு டோக்கன் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பல்வேறு ரேசன் கடைகளில் இடைவெளி விட்டு நிவாரண தொகையை மக்கள் வாங்கிச் சென்றனர். இந்த நிவாரண உதவி பொருட்கள் வருகின்ற 15 ஆம் தேதி வரை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில்; தமிழக அரசு அறிவித்திருக்கும் 1000 ரூபாய் நிவாரண உதவித் தொகை மற்றும்  இலவசமான உணவுப்பொருட்களை வாங்க விருப்பமில்லாதவர்கள் tnpds.gov.in என்ற இணைய முகவரி மற்றும் tnpds. என்ற அப்ளிகேசனிலும் சென்று தங்கள் விருப்பத்தை தெரிவிக்கலாம் என்றும், இது ஏப்ரல் மாதத்திற்கு மட்டுமே பொருந்தும் என்று கூறியுள்ளது. இதனால் நிவாரண பொருட்களை வாங்க விருப்பம் இல்லாதவர்கள் இதில் பதிவு செய்ய தொடங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

50 கோடி பேர் இந்தியாவில் சாக வேண்டும்! எச்.ராஜா வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ.!!

0

50 கோடி பேர் இந்தியாவில் சாக வேண்டும்! எச்.ராஜா வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ.!!

டெல்லி தப்லீக் இஸ்லாமிய மாநாட்டில் கலந்து கொண்ட பலருக்கு கொரோனா அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் கலந்துகொண்ட பலர் அவரவர் சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். அரசும் இந்த தகவலை உறுதி செய்து டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட அனைவரையும் தாமாகவே முன்வந்து பரிசோதனை செய்யுமாறு அறிவுறுத்தியது. இஸ்லாமியர்கள் கொரோனா நோயை பரப்புவதாக ஒரு தகவல் இணையங்களில் உலாவி வருகிறது.

இந்நிலையில் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டரில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நோய்க்கு மதம் இல்லை ஆனால் இவருக்கு மதம் பிடித்துள்ளதா இல்லையா? என்றும் இந்தியாவில் 50 கோடி பேர் சாக வேண்டும் என்றும் ஒரு இஸ்லாமியர் பேசிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவிற்கு பலர் கருத்து தெரிவித்து உங்களுக்கு உருது எப்படி தெரியும் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளனர். இதற்கு உடனே பதிலளித்த எச்.ராஜா, அவர் பேசியது உருதுமொழி அல்ல வங்காளி மொழி. உங்களுக்கு புரிய வேண்டுமென்றால் கொல்கத்தா சென்று வங்காளி மொழியில் பேசிய ஸ்டாலினிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறினார். மேலும் அது வங்காளி அல்ல பெங்காளி என அதை வைத்து ஒரு பாடமே எடுத்திருந்தார்.

உங்களுக்கு எப்படி வங்காளம் தெரியும் என மீண்டும் கேள்வி எழுந்த நிலையில், நான் நான்கு வருடமாக மத்திய பிரதேசத்தில் உள்ள கோல் இந்தியாவில் வேலை செய்தேன். அங்கு பல வங்காளிகள் என்னுடன் பணியாற்றிய போது அம்மொழியை அறிந்துகொண்டேன் என்றும் விளக்கமளித்தார்.

மேலும், தஞ்சையில் உள்ள அகரமாங்குடி அருகே மெலட்டூர் பகுதிதான் என் சொந்த ஊர் என்றும் திக மற்றும் திமுகவினர்களுக்கும் பதிலடி கொடுக்கும் விதமாக கூறியுள்ளார். இவரது பூர்வீகம் பற்றி அடிக்கடி இணையத்தில் விவாதங்கள் நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கது.

ரேஷன் கடையில் நிவாரண பொருட்களை தொடாமல் வழங்க சூப்பர் ஐடியா : வைரலாகும் வீடியோ! குவியும் பாராட்டு!

0

ரேஷன் கடையில் நிவாரண பொருட்களை தொடாமல் வழங்க சூப்பர் ஐடியா : வைரலாகும் வீடியோ! குவியும் பாராட்டு!

உலகமே கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தங்கள் நாட்டு மக்களை பாதுகாக்க தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த பாரத பிரதமர் மோடி யாரும் வெளியில் வரவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொண்டார்.

இந்த அதிரடி உத்தரவால் காவல்துறை வெளியில் வருபவர்களிடம் கண்டிப்பு காட்டி வந்தது, இதனால் நாடு முழுவதும் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் வெளியே வரவேண்டாம் என்று தமிழக முதல்வரால் அறிவுறுத்தப்பட்டது.

இதற்கிடையில் ஏப்ரல் 2ஆம் தேதி முதல் 1000 ரூபாய் நிவாரண தொகையையும் விலையில்லா நிவாரண பொருட்களையும் பெற்றுக் கொள்ளலாம் என்று முதல்வர் அறிவித்து இருந்தார். இதனால் நேற்றே(ஏப் – 1) ரேஷன் கடைகளில் 1 மீட்டர் இடைவெளி விட்டு கோடுகளை போட்டு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் செய்து வைத்தனர்.

இந்த நிலையில் டோக்கன்கள் வழங்கப்பட்டு வெவ்வேறு பகுதி மக்களையும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் வர வைத்து நிவாரண பொருட்களை இன்று வழங்கினர். அதில் குறிப்பிடும் படியாக அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை நீளமான(3 மீட்டர்) குழாயில் கொட்டி மறுமுனையில் மக்கள் தங்கள் பைகளில் பிடிக்கும்படி சில ரேஷன் கடைகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்தந்த பகுதி அதிகாரிகளின் பிரத்தியேக யோசனையால் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடிகிறது, மேலும் நோய் தொற்று ஏற்படாமல் தவிர்க்க முடிகிறது என்று பொது மக்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

இளைஞர்கள் நினைத்தால் மலையை கூட இழுத்துவர முடியும்! இளைஞர்களுக்கு அன்பு வேண்டுகோள் வைக்கும் ராமதாஸ்!!

0

இளைஞர்கள் நினைத்தால் மலையை கூட இழுத்துவர முடியும்! இளைஞர்களுக்கு அன்பு வேண்டுகோள் வைக்கும் ராமதாஸ்!!

கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்றும் இருசக்கர வாகனங்களை வீட்டில் பூட்டி வையுங்கள் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆபத்தான நிலையில் பொதுமக்கள் பலர் வெளியில் அலட்சியத்துடன் சுற்றி வருகின்றனர். இதனால் காவல்துறையில் நூதன தண்டனை மற்றும் விழிப்புணர்வு சம்பவமும் நடந்து வருகின்றன. அரசும் போர்க்கால நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து ஒரு வாரங்கள் கடந்த நிலையில், அதுபற்றிய அச்சமும் விழிப்புணர்வும் மக்களிடம் இல்லை. பொதுமக்கள் வழக்கம்போல வெளியே நடமாடுகின்றனர். குறிப்பாக இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சாலையில் சுற்றித் திரிகின்றனர். இதுகுறித்து ராமதாஸ் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

அவரது டுவிட்டரில் கூறியதாவது;
இந்த நாட்டின் எதிர்கால தூண்களான இளைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்களது இருசக்கர வாகனங்களை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு அத்தியாவசிய தேவை அன்றி வெளியில் எட்டிப்பார்க்க வேண்டாம், அதுவே கொரோனா தடுப்புக்கு நீங்கள் செய்யும் பெருந்தொண்டு என கூறியுள்ளார்.


மேலும், இளைஞர்களின் சக்தி நினைத்தால் இமயத்தையே இழுத்து வர முடியும் என்றும், உங்களால்தான் தமிழ்நாட்டு மக்களை காக்க முடியும் ஆகவே அவர்களை பாதுகாக்கும் பொருட்டு வீட்டிலேயே மகிழ்ச்சியாக இருங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

கிணற்றில் தவறி விழுந்த ஆண் சிறுத்தை! வனத்துறையினர் மீட்பு..!!

0

கிணற்றில் தவறி விழுந்த ஆண் சிறுத்தை! வனத்துறையினர் மீட்பு..!!

கிணற்றில் தவறி விழுந்த ஆண் சிறுத்தையை வனத்துறையினர் பத்திரமாக மீட்ட சம்பவம் சத்தியமங்கலத்தில் நடந்துள்ளது.

சத்தியமங்கலம் வனப்பகுதியில் இருக்கும் புலிகள் காப்பக பகுதியில் புலி, சிறுத்தை, யானை, உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த விலங்குகள் இரை தேடுவதற்காக வனப்பகுதி அருகே உள்ள பகுதிகளில் புகுந்து ஆடு, மாடு, கோழி போன்ற உயிரினங்களை அடிக்கடி வேட்டையாடி செல்வது பலநாட்களாக தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில் சத்தியமங்கலம் அருகேயுள்ள கிராம விவசாயி ஒருவரின் தோட்டத்தில் சில தினங்களுக்கு முன்பு சிறுத்தை ஒன்று உள்ளே புகுந்து நாயை அடித்துக் கொன்றது. இதனால் சிறுத்தையை உடனடியாக பிடிக்க பவானிசாகர் வனத்துறை அதிகாரிகள் மூலம் கூண்டு வைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று வனப்பகுதியை விட்டு வழக்கம்போல விவசாய தோட்டத்திற்கு வந்த ஆண் சிறுத்தை அங்கிருந்த கிணற்றில் தவறி விழுந்தது.

இதனையடுத்து சிறுத்தையின் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் மூலம் பவானிசாகர் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையை பிடிக்க வலையை வீசி மயக்க ஊசி செலுத்தி கூண்டில் அடைத்தனர். இதையடுத்து பவானிசாகர் அருகேயுள்ள வனப்பகுதிக்கு கொண்டு சென்று கூண்டை திறந்தவுடன் அதிலிருந்த ஆண் சிறுத்தை வேகமாக காட்டிற்குள ஓடியது. அப்பகுதியில் காட்டு விலங்குகளால் வீட்டு விலங்குகள் அதிகம் பாதிக்கப்படுவது தொடர்ந்து வருகிறது.

கொரோனா பாதிப்பு: இந்திய கிரிக்கெட் அணியின் சம்பளத்தில் கை வைக்கப்படுமா.?

0

கொரோனா பாதிப்பு: இந்திய கிரிக்கெட் அணியின் சம்பளத்தில் கை வைக்கப்படுமா.?

கொரோனா பாதிப்பின் காரணமாக நடக்க இருந்த கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா நிவாரண நிதிக்காக கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தில் கை வைக்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

உலகளவில் ஆதிக்கம் செய்து வரும் கொரோனா இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் விதமாக தேசிய ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு ஒரு வாரத்திற்கு முன்பு அமல்படுத்தியது. இந்த பாதிப்பினால் உலகளவில் 47 ஆயிரம் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் 2 ஆயிரம் பேர் கொரோனா தொற்று கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர். 58 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி விளையாட இருந்த பல்வேறு போட்டிகளுக்கு தற்காலிக தடை அல்லது நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் கிரிக்கெட் வாரியத்திற்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை காரணமாக வைத்து இந்தி கிரிக்கெட் அணி வீரர்களின் சம்பளம் குறைக்கப்படலாம் என்கிற தகவல்களும் வெளியாகின. மார்ச் கடைசியில் ஆரம்பிக்க வேண்டிய ஐபிஎல் போட்டிகளும் தற்காலிக தடையில் இருப்பதால் இந்தியா கிரிக்கெட் ரசிகர்களும் வருத்தத்தில் உள்ளனர்.

இதுகுறித்து பிசிசிஐ நிர்வாகம் சார்பில் விளக்கம் தெரிவிக்கையில்; இந்திய கிரிக்கெட் அணியினரின் சம்பளத்தை குறைப்பது தொடர்பான எந்தமாதிரியான முடிவுகளும் இதுவரை எடுக்கப்படவில்லை. இதுபோன்ற இக்கட்டான சூழலுக்கு எடுக்கப்பட்டும் முடிவுகள் அனைவரின் நலம்சார்ந்தே எடுக்கப்படும் என்று பிசிசிஐ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், சில மாதங்களுக்கு இந்திய கிரிக்கெட் போட்டிகள் நடக்க வாய்ப்பில்லை என்பதால் சம்பள பிடித்தம் நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தனது ஊரை காக்க எல்லையில் அமர்ந்த எல்லைச்சாமி..!! கொரோனா பாதுகாப்பில் வியக்கவைத்த இளம்பெண்.!!

0

தனது ஊரை காக்க எல்லையில் அமர்ந்த எல்லைச்சாமி..!! கொரோனா பாதுகாப்பில் வியக்கவைத்த இளம்பெண்.!!

கொரோனா பாதிப்பில் இருந்து தங்கள் ஊரை காக்க ஊர் எல்லையில் பாதுகாப்பு வேலி அமைத்து முக கவசத்துடன் எல்லைச்சாமி போல் ஒரு இளம்பெண் அமர்ந்துள்ள சம்பவம் பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

உலகளவில் 47 ஆயிரம் பேரை பலிவாங்கிய கொரோனா வைரஸ் என்ற நச்சுக்கிருமி தொடர்ந்து மக்களிடையே தீவிரமாக பரவி வருகிறது. அதனை தடுக்க மருத்துவர்களும் தீவிரமாக போராடி வருகின்றனர். இதன் விளைவாக இந்தியாவில் தேசிய ஊரடங்கு அமல்படுத்தி தீவிர கண்காணிப்பில் அரசு ஈடுபட்டு வருகிறது. பொதுமக்களும் பலர் வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டாலும் சிலர் சாலைகளில் நடமாடி வருகின்றனர்.

இதனையடுத்து மற்றவருக்கு நோய் பரவுவதை தடுக்கும் வகையில் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு அரசு வலியுறுத்தியது. அத்தியாவசிய பொருட்களை வாங்கச் சென்றாலும் அவசரமாக வெளியில் சென்றாலும் இன்னொருவருடன் கைகுலுக்க வேண்டாம் என்றும் மீட்டர் இடைவெளிவிட்டு சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன. பலரும் அரசின் உத்தரவை மதிக்காமலும் கொரோனாவின் அச்சத்தை உணராமலும் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள மதனபுரம் என்ற கிராமத்தின் ஊர்தலைவராக இருப்பவர் அகிலா (23). இவர் தனது ஊர் மக்களை கொரோனா பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் விதமாக ஊருக்கு உள்ளே செல்லும் பாதையை முள் வேலிகளை போட்டு அடைத்து அங்கேயே நாற்காலியுடன் முக கவசங்களை கட்டிக்கொண்டு அமர்ந்துள்ளார். வில்லேஜ் ஆர்மிபோல ஊர் எல்லையில் தலைவர் அமர்ந்திருப்பதை பார்த்து யாரும் ஊருக்குள் இருந்து வெளியேவும், வெளியில் இருந்து உள்ளேயும் வரவிடாமல் பார்த்துக் கொள்கிறார். இதனால் கொரோனா பாதிப்பில் இருந்து சொந்த கிராம மக்களின் உயிரை அகல்யா காப்பாற்றி வருகிறார்.

மேலும், எங்கள் கிராமத்தில் 1,600 பேருக்கு வசித்து வருகிறோம், ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும் கூட அது பலருக்கு பரவி விடும் என்று கூறி, மற்றவர்களுக்கு விழிப்புணர்வு தரும் வகையில் செயல்பட்டு வருகிறார். சமூக வலைதளங்களில் இவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

டெல்லி தப்லீக் ஜமாஅத் இஸ்லாமிய மாநாட்டில் கலந்து கொண்டோர் மருத்துவர்கள் மீது எச்சிலை உமிழ்ந்து அட்டகாசம்!

0

டெல்லி தப்லீக் ஜமாஅத் இஸ்லாமிய மாநாட்டில் கலந்து கொண்டோர் மருத்துவர்கள் மீது எச்சிலை உமிழ்ந்து அட்டகாசம்!

சீனாவின் வூகான் நகரில் தொடங்கி பல நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல உயிர்களை கொத்துக்கொத்தாக கொன்று வருகிறது. இதனால் பாரத பிரதமர் மோடி நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை மக்கள் பொது இடங்களுக்கு வரவேண்டாம் என்று ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கும் முன்னதாக டெல்லி நிஜாமுதீனில் உள்ள தப்லீக் ஜமாஅத்தில் மார்ச் 13 முதல் மார்ச் 15 வரை இஸ்லாமிய மாநாடு நடந்துள்ளது. இந்த மாநாட்டில் 3400 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டுள்ளனர், அதில் 250 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை கிடையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மார்ச் 16ம் தேதி மாநாடு, கூட்டம் நடத்துவது மற்றும் மக்கள் பொது இடங்களில் கூட தடை விதித்தார். இதனால் அந்த ஜமாஅதில் இருந்து பலர் புறப்பட்டுள்ளனர், இதில் சிலர் அங்கேயே தொடர்ந்து தங்கியுள்ளனர்.

இதனையடுத்து மார்ச் 23 ஆம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டது, இதனால் அங்கிருந்து அவர்கள் வெளியூர்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. அந்த ஜமாஅத்தில் தங்கியிருந்த இந்த வேளையில் பல்வேறு ஊர்களை சேர்ந்த இஸ்லாமியர்கள் அனைவருக்கும் இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த 29ம் தேதி வெளிநாட்டில் இருந்து வந்த சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்து உறுதி செய்யப்பட்டுள்ளது. உடனே ஜமாஅதில் இருந்த அனைவரையும் வெளியேற்றி சீல் வைக்கப்பட்டது, மேலும் அங்கிருந்தவர்களை பாதுகாப்பு மையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

கடந்த மார்ச் 31ம் தேதி இரவு 5 பேருந்துகளில் கொண்டு செல்லப்பட்ட 167 பேரை தனிமைப்படுத்தி பாதுகாப்பில் வைத்துள்ளது மத்திய அரசு. மறுநாள் காலை அவர்கள் மருத்துவர்கள் பரிந்துரைத்த உணவுகளை உண்ண மறுத்து தங்கள் விருப்பமான உணவுகளை கேட்டு ரகளை செய்துள்ளனர்.

மேலும் தங்கள் எதிர்ப்பை காட்டும் விதமாக பாதுகாப்பு மையத்தில் வெளியில் சுற்றி திரிந்துள்ளனர். அவர்களை உள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்திய மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் மீது எச்சிலை உமிழ்ந்து அட்டகாசம் செய்துள்ளனர்.

இந்த இஸ்லாமியர்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்க மறுத்து வருவதால் மருத்துவர்கள் அந்த மையத்தில் சிகிச்சை அளிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

8 மாத கர்ப்பத்துடன் கொரோனா நோய்க்கு சிகிச்சை அளித்த நடிகர் விமலின் மனைவி! ஆச்சரியமான தகவல்!!

0

8 மாத கர்ப்பத்துடன் கொரோனா நோய்க்கு சிகிச்சை அளித்த நடிகர் விமலின் மனைவி! ஆச்சரியமான தகவல்!!

நடிகர் விமலின் மனைவி ஒரு மருத்துவர். தற்போதைய சூழலில் அவர் 8 மாதம் கர்ப்பமாக இருந்தும், கொரோனாவை அழிக்க பல நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்துவருவது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த நடிகர் விமல் தமிழ் சினிமாவில் களவாணி படத்தில் அறிக்கி என்ற கதாப்பாத்திரத்தின் மூலம் மிகவும் பிரபலம் ஆனவர். இதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் அவர் நடித்து வருகிறார். கொரோனா பாதிப்பால் சினிமா திரைப்பட ஷூட்டிங் அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. நடிகர் விமல் அவரது குடும்பத்துடன் மணப்பாறையில் வசித்து வருகிறார். அவரது மனைவி சொந்த ஊரிலேயே மருத்துவம் பார்த்து வருகிறார்.

எட்டு மாத கர்ப்பிணியாக இருக்கும் நடிகர் விமலின் மனைவி, இந்த இக்கட்டான ஊரடங்கு சூழலிலும் நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறார். நிறைமாத கர்ப்பிணியாக இருப்பினும், சிகிச்சைப்பெற வரும் நோயாளிகளுக்கு சரியான மருத்துவம் அளித்து அவர்களை நோயிலிருந்து குணமாக்கும் நல்ல டாக்டராக திகழ்கிறார்.

இதுகுறித்து அவரது கணவர் நடிகர் விமலிடம் கேட்டபோது; என்னுடைய மனைவி ஒரு மருத்துவர் என்பதில் எனக்கு பெருமை. எப்போதுமே அவர் சரியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார். ஆகையால் உலக நானுகளையே அச்சுறுத்தி வரும் கொரோனோ வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க கடந்த வாரம் வரை மருத்துவமனைக்கு சென்று கர்ப்பிணியாக இருந்தும் பணியாற்றி வந்தார்.

நிறைமாத கர்ப்பிணி என்பதால் அவருக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது குடும்பத்துடன் வீட்டில் மகிழ்ச்சியாக இருந்து வருகிறோம். கிராமத்து மக்களிடையே கொரோனா பற்றிய விழிப்புணர்வையும் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறோம்.