சனிக்கிழமை, டிசம்பர் 13, 2025
Home Blog Page 5698

மிகவும் நேர்மையான அரசியல்வாதிகளில் ஒருவர் பேராசிரியர் அன்பழகன் : டாக்டர் ராமதாஸ் புகழாரம்

0

திமுகவின் மூத்த அரசியல் தலைவர்களுள் ஒருவர் பேராசிரியர் அன்பழகன். இவர் திமுகவின் பொதுச் செயலாளராக 43 ஆண்டுகளாக இருந்து வந்தார்.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நல குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் அவர் உடல்நிலை மேலும் குன்றியதாக தகவல்கள் வெளிவந்தன. இதனால் திமுகவின் மூத்த உறுப்பினர்கள் அவரை சென்று நலம் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் அவர் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததாக நேற்று தகவல் வெளியானது. உடனே திமுகவின் தலைவர் மு க ஸ்டாலின் மருத்துவமனைக்கு விரைந்தார்.

மிகவும் மோசம் அடைந்த அவரது உடல் நிலையால் நள்ளிரவில் அவர் உயிர் பிரிந்தது. இது திமுக மற்றும் திராவிட கழகத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

அதன் பிறகு நள்ளிரவில் டாக்டர் ராமதாஸ் தனது இரங்கல் செய்தியை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது;

“திமுகவின் பொதுச்செயலாளரும், திராவிட இயக்க முன்னோடிகளில் ஒருவருமான பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சி அடைந்தேன். மிகவும் நேர்மையான அரசியல்வாதிகளில் ஒருவர். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்”.

பேராசிரியர் அன்பழகன் மறைவிற்கு பல மூத்த தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

திரௌபதி படத்திற்கு எதிராக களமிறங்கிய பிரபல யூட்யூப் சேனல் : உண்மையை வீடியோவுடன் வெளிச்சம் போட்டு காட்டிய இயக்குநர்!

0

சமீபத்தில் வெளியான திரௌபதி படம் பல சர்ச்சைகளுக்கு நடுவில் மாபெரும் வெற்றி அடைந்துள்ளது. அதில் மிகவும் குறிப்பிடும்படியாக 300 தியேட்டர்களில் ஒரு வாரத்தை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது.

இதற்கு காரணம் திரௌபதி கிரவுட் ஃபண்டிங் முறையில் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ்ப்படம் என்பதாகும். இந்தப் படம் கடந்த ஒரு வாரத்தில் தயாரித்த செலவை விட 20 மடங்கு வசூலை ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது கோலிவுட் வட்டாரத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் அந்த படத்தின் இயக்குனர் மோகன் சினிமா வட்டாரத்தில் பிரபலமடைந்துள்ளார்.

இந்த வெற்றியின் காரணமாக இயக்குனர் மோகன் பல்வேறு தொலைக்காட்சி மற்றும் யூடியூப் சேனல்களின் நேர்காணல்களில் கலந்து கொண்டு வந்தார். இந்நிலையில் பிரபல சினிமா மீடியாவின் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அந்த இயக்குனர் நேர்காணல் வழங்கியிருந்தார்.

அந்த நேர்காணலில் சர்ச்சைக்குரிய கேள்விகள் தொடர்ந்து கேட்கப்பட்டதாக தெரிகிறது. அதற்கு இயக்குனர் மோகன் விளக்கம் அளித்தும் அதை ஏற்க மறுப்பது போல் கேள்விகள் கேட்கப்பட்டன.

மேலும் அவர் பிரபல இயக்குனர் மற்றும் ஒரு அரசியல் தலைவரை தாக்கியே படம் எடுத்துள்ளதாகவும் கேள்விகள் முன் வைக்கப்பட்டன. அதோடு நிறுத்தாமல் வேறு ஒரு அரசியல் கட்சியை இயக்குனர் மோகனுடன் தொடர்புபடுத்தி கேள்விகள் கேட்கப்பட்டன.

இந்தக் கேள்விகள் வேண்டுமென்றே தன்னை தாக்கி கேட்கப்படுவதாக கூறி இயக்குனர் அந்தக் நேர்காணலிலேயே கூறியிருக்கிறார். இதற்கு மேல் இந்த நேர்காணல் தொடர்ந்தால் அது நன்றாக இருக்காது என்று நன்றி கூறிய இயக்குனர் மோகன் அங்கிருந்து கிளம்பி இருக்கிறார்.

இதனை அந்த பிரபல மீடியா நிறுவனம் இயக்குனர் பாதியிலேயே வெளிநடப்பு செய்தது போன்று சில காட்சிகளை நீக்கிவிட்டு ஒளிபரப்பியுள்ளது. இதைப் பார்த்த இயக்குனர் தான் அங்கிருந்து வெளிநடப்பு செய்யவில்லை என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த செயலுக்கு அந்நிறுவனம் மன்னிப்பு கேட்கும் வரை தான் விடப்போவதில்லை என்று அதில் கூறியிருந்தார். இதற்கு அந்த மீடியா நிறுவனம் பதிலளிக்கவில்லை என்று தெரிகிறது.

இதனால் அந்த நிறுவனத்தின் அலுவலகத்திற்கு நேராக சென்ற இயக்குனர் விளக்கம் தரும்படி கேட்டிருக்கிறார். அதற்கு அந்த நிறுவனம் அவர் நன்றி கூறி விடை பெற்ற காட்சிகள் பதிவாகவில்லை என்று மழுப்பலான பதில் அளித்தனர்.

அந்த வீடியோவில் அவர் வெளியேறி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது ஆனால் நன்றி கூறிய காட்சிகள் ஏன் பதிவாகவில்லை என்று நிகழ்ச்சியின் இயக்குனரிடம் கேட்டுள்ளார். இந்த நிகழ்வை தனது உதவியாளருடன் வீடியோவாக எடுத்த இயக்குநர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீயோவை சமூக வலைதளங்களில் பார்த்த நெட்டிசன்கள் அந்த மீடியா நிறுவனத்தின் மீது தங்கள் கோபத்தை பதிவு செய்து வருகின்றனர். மேலும் இதுபோன்ற நிறுவனங்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டிய திரௌபதி பட இயக்குனரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

அவாளுக்கு மட்டும் தனி டாய்லெட்! இதுல கூட பிரிவினையா..? பொதுமக்கள் கண்டனம்!

0

அவாளுக்கு மட்டும் தனி டாய்லெட்! இதுல கூட பிரிவினையா..? பொதுமக்கள் கண்டனம்!

உலகத்தில் ஆண், பெண் என்ற வகையில் மட்டுமே தனித்தனியாக கழிவறைகள் கட்டப்படும். ஆண்களுக்கான கழிவறையை ஆண்களும், பெண்களுக்கான கழிவறையை பெண்கள் மட்டும் பயன்படுத்துவதே மனித நாகரிகத்தில் பொதுவாக இருந்து வருகிறது.

இந்நிலையில், கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள கோயில் ஒன்றில் ஆண், பெண் மற்றும் பிராமணர் என்று மூன்று விதமான பெயர் பலகையுடன் தனித்தனியே டாய்லெட் முன்பு எழுதப்பட்டிருந்தது. இது ஆங்கில செய்தி ஒன்றில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பொது மக்களிடையே கண்டனத்திற்கு உள்ளானது.

இதுகுறித்து கோயில் நிர்வாகத்திடம் கேள்விகேட்டபோது; அந்த பெயர் பலகை 25 ஆண்டுகளுக்கு முன்பு வைத்தது என்றும், கோவில் நிர்வாகிகள் அங்கு செல்வதில்லை என்றும் பதில் அளிக்கப்பட்டது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் மட்டுமே அந்த கழிவறைகளை பயன்படுத்தி வந்ததாக கூறப்பட்டது. கோயிலுக்கு வரும் பக்தர்களிடையே அருவெறுக்கத்தக்க பிரிவினையை ஏற்படுத்தும் பலகையை உடனடியாக நீக்குவதாக என்றும் கோயில் நிர்வாகம் சார்பில் கூறப்பட்டது.

இச்சம்பவம் முன்பு நடந்திருந்தாலும் கழிவறையின் புகைப்படம் திடீரென்று இணையத்தில் பரவி பலர் மத்தியில் வெறுப்பையும் இதில் கூடவா இப்படி என்று பேசும் அளவிற்கு கண்டனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

ராகுல் காந்திக்கு கொரோனோ பரிசோதனை செய்ய வேண்டும்-பாஜக எம்பி சர்ச்சை பேச்சு

0

ராகுல் காந்திக்கு கொரோனோ பரிசோதனை செய்ய வேண்டும்-பாஜக எம்பி சர்ச்சை பேச்சு

உலக அளவில் பேசப்படும் பொருளாகவும் மக்களை அச்சத்தில் ஆழ்த்தி பல இன்னல்களை கொடுத்துக் கொண்டிருக்கும் பெயர் கொரோனா என்று சொல்லப்படுகின்ற கோவிட்-19 வைரஸ்.

இதுவரையில் இந்தியாவில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று கூறி வந்த மத்திய அரசு கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு இந்தியாவில் இதுவரை 29 நபர்களுக்கு கொவிட்-19 ரக வைரஸ் தாக்கியுள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்சவர்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.இதன் விளைவாக N90 ரக மாஸ்குகளின் விற்பனையும் பெருமளவு அதிகரித்துள்ளது.இந்த அச்சம் பட்ஜெட் கூட்டத் தொடர் நடக்கும் மக்களவையையும் விட்டுவைக்கவில்லை.

கூடிப்பேசி ஆரத்தழுவி கைகுலுககி நலம் விசாரித்துச் சென்ற மக்களவை உறுப்பினர்கள் தற்போது கொரோனா அச்சத்தால் அதிகம் பேசாமல் செல்வதாக மக்களவை வட்டாரங்கள் செய்தி தெரிவிக்கின்றன.

நேற்று மக்களவை கூட்டத்தை விட்டு வெளியே வந்த பாஜக எம்பி ரமேஷ்பிதூரி ஒரு சர்ச்சையான கருத்தை தெரிவித்தார்.அதாவது கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி அவர்கள் இத்தாலி சென்று வந்தார்.அவருக்கு கொரோனோ இருக்குமோ என்ற அச்சம் எங்களுக்கு உள்ளது.

அவருக்கு முதலில் கொரோனோ உள்ளதா என பரிசோதனை செய்ய வேண்டும் ஏனென்றால் ஒருவேளை அவருக்கு கொரோனோ தொற்று இருந்தால் அது அவருக்கு அருகில் இருப்பவர்களுக்கு பரவி அவர்கள் மூலம் எங்களுக்கும் பரவும் அபாயம் உள்ளது என கூறினார்.மக்களவையின் உள்ளே இது குறித்து பேசாத பாஜக எம்பி வெழியே வந்து பத்திரிக்கையாளர்களிடம் ஏன் இவ்வாறான கருத்தை தெரிவித்தார் என்ற கேள்வி பல்வேறு தரப்பிலும் எழுந்துள்ளது.

மகளிர் தினத்தை முன்னிட்டு துப்புரவு பணியாளர்களை “திரெளபதி’ படத்திற்கு அழைத்துச் சென்ற ஆளுநர்..!!

0

மகளிர் தினத்தை முன்னிட்டு துப்புரவு பணியாளர்களை “திரெளபதி’ படத்திற்கு அழைத்துச் சென்ற ஆளுநர்..!!

புதுச்சேரி: ஒவ்வொரு வருடமும் மார்ச் 8 ஆம் தேதி “உலக மகளிர் தினம்’ சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், மகளிர் தினத்தை முன்னிட்டு புதுச்சேரியின் ஆளுநர் கிரண்பேடி வித்தியாசமான செயலை செய்து பொதுமக்களை ஈர்த்துள்ளார்.

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் வேலை பார்க்கும் பெண் ‘துப்புரவு பணியாளர்கள்’ அனைவரையும் சமீபத்தில் வெளியாகி மிகப்பெறும் வெற்றியை பெற்ற “திரெளபதி’ திரைப்படத்திற்கு அனுப்பியுள்ளார். இதை மகளிர் தினச் சிறப்பாக கொண்டாடும் வகையில் தனது டுவிட்டரில் பதிவு செய்து மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். ஆளுநர் கிரண்பேடியின் டுவிட்டருக்கு திரெளபதி படத்தின் இயக்குனர் மோகன் ஜி அந்த பதிவிலேயே நன்றி கூறியுள்ளார்.

புதுவையின் ஆளுநரே மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் அலுவலக பணியாளர்களுக்கு படம் பார்க்க ஏற்பாடு செய்த செயல் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆளுநரின் டுவிட்டர் பதிவு சமூகவலைதளங்களில் பலராலும் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றனர்.

இப்படம் கிரவுட் பண்ட்டிங் மூலம் தயாரிக்கப்பட்ட படமாகும். திரெளபதி வெளியாவதற்கு முன்பே பெருமளவு ஆதரவும், சில எதிர்ப்பும் கிளம்பியது. மேலும் அரசியல் சர்ச்சை மற்றும் விமர்சனங்களும் எழுந்தன. டிரெய்லர் மட்டுமே கிட்டத்தட்ட 50 லட்சம் பேர் பார்த்தனர். கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியான இப்படம் தமிழகத்தில் மட்டும் 330 தியேட்டர்களில் வெளியானது மட்டுமல்லாமல் தற்போது கூடுதல் திரையரங்குகளிலும், சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளிலும் திரெளபதி வெற்றிநடை போடுகிறாள்.

இப்படத்தை பார்த்த பெருமளவு பொதுமக்கள் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். படத்தின் பட்ஜெட் 50 லட்சம் என்று இயக்குனர் பேட்டியில் கூறியிருந்தார். படம் வெளியாகி இதுவரை
10 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்து வருகிறது. பிரபலம் இல்லாத இயக்குனர், இசையமைப்பாளர், பெரிய நடிகர் நடிகை இல்லாமலே இப்படம் சக்கைபோடு போட்டு வருகிறது. நாடக காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தை பல்வேறு அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களும் குடும்பம் குடும்பமாக பார்த்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தப்புமா சென்னை? பீதியை கிளப்பும் ஹாங்காங் பயணி!

0

கடந்த மாதம் 27-ம் தேதி ஹாங்காங்ல் இருந்து Hwang shin hung என்ற பெண்மணி சென்னை வந்துள்ளார். இப்பெண்மணி சென்னை அய்யப்பன்தாங்கலில் உள்ள பிரபல அப்பார்ட்மெண்ட் ஒன்றில் தங்கி இருந்துள்ளார்.

இவர் மீது சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் பொது சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். மருத்துவர்களுடன் அந்த அப்பார்ட்மெண்ட்க்கு விரைந்த பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் Hwang shin hung -ஐ பரிசோதனை செய்தனர். அதில் கொரோனா வைரஸ் அறிகுறி எதுவும் இவர் மீது இல்லை என உறுதி செய்தனர்.

இதனையடுத்து இவர் கொரானா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 14 நாட்கள் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது என அறிவுறுத்தப்பட்டார். ஆனால் இவர் கடந்த சிலநாட்களாக பாதுகாப்பை மீறி வெளியே சென்று வருவதாக புகார் எழுந்தது.

சுகாதார துறையினர் அப்பெண்மணியை வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.

கள்ளிப்பால் ஊற்றி கொலை செய்த தம்பதி! பெண் குழந்தை என்றால் அவ்வளவு கேவலமா..???

0

கள்ளிப்பால் ஊற்றி கொலை செய்த தம்பதி! பெண் குழந்தை என்றால் அவ்வளவு கேவலமா..???

பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தையை கள்ளிப்பால் ஊற்றி கொன்ற கொடூர சம்பவம் மதுரையில் அரங்கேறியுள்ளது.

மதுரை மாவட்டத்தில் செங்கானூரணி அருகே உள்ள புல்லநேரி கிராமத்தில் வைரமுருகன் என்பவர் பழக்கடை வியாபாரம் நடத்தி வருகிறார். இவருக்கு செளமியா என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் இரண்டாவதாக கர்ப்பம் தரித்து கடந்த ஜனவரி மாதம் செளமியாவிற்கு இரண்டாவதாக ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. ஆண் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில், 2 -வதும் பெண் குழந்தை பிறந்துவிட்டதால் வைரமுருகனுக்கும் செளமியாவிற்கும் இடையே வெறுப்போடும், மன நிம்மதி இல்லாமலும் இருந்தனர்.

இதனையடுத்து, விரக்தியில் இருந்த வைரமுருகன் தனது மனைவியின் ஆதரவோடு இரண்டாவது பெண் குழந்தையை கொல்ல முடிவு செய்தார். கடந்த மார்ச் 2 ஆம் தேதி குழந்தை உடல்நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டதாக கூறி தனது வீட்டின் அருகே புதைத்துவிட்டனர். சொந்தபந்தம் மற்றும் ஊர் மக்களுக்கு தெரியாமல் இந்த கொலை நடந்ததுள்ளது. இதனை கவனித்த அக்கம்பக்கத்தினருக்கு வைரமுருகன் மீது சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் இதுகுறித்து மீனாட்சிபட்டி விஏஓ மூலமாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் கிடைத்தவுடன் வைரமுருகன் வீட்டு அருகே புதைக்கப்பட்டிருந்த பச்சிளம் குழந்தை தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மருத்துவ பரிசோதனையில் குழந்தைக்கு கள்ளிப்பால் ஊற்றி கொன்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. பச்சிளம் குழந்தையை திட்டமிட்டு கொலை செய்த குற்றத்திற்காக வைரமுருகன் அவரது மனைவி செளமியா மற்றும் குழந்தைக்கு தாத்தாவான சிங்கத்தேவர் என்பவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர். பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தை கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துண்டு சீட்டை பார்த்தவுடன் “கெட்ட வார்த்தையில் திட்டுவேன்’ என்று ராதாரவி ஆவேசம்! என்னதான் எழுதினார்கள்..?

0

துண்டு சீட்டை பார்த்தவுடன் “கெட்ட வார்த்தையில் திட்டுவேன்’ என்று ராதாரவி ஆவேசம்! என்னதான் எழுதினார்கள்..?

திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய கொடுக்கப்பட்ட துண்டு சீட்டால் ராதாரவி உச்சகட்ட கோபமடைந்தார்.

சென்னை வடபழனியில் நடந்த “ராஜவம்சம்” பட இசை வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ராதாரவி, எனக்கு இந்தி தெரியாத காரணத்தால் தமிழ் படங்களில் மட்டும் நடித்து வருகிறேன். இந்தி மொழி தெரிந்திருந்தால் நடிகை ஐஸ்வர்யாராயுடன் இந்தி படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும் என்று கூறினார்.

நீண்ட ராதாரவி பேசிக்கொண்டே இருந்ததால் கடுப்பான படக்குழுவினர் விரைவில் பேச்சை முடிக்கும் படி ஒரு துண்டு சீட்டில் எழுதி கொடுத்தனர். அதைப்பார்த்தவுடன் கொதிப்படைந்த ராதாரவி என்னை சீக்கிரம் முடிக்க சொன்னால் ‘கெட்ட வார்த்தையில் திட்டுவேன்’ என்று கோபமாக கூறினார். இதனையடுத்து விழா மேடை கப்சிப் ஆனது.

பாஜகவிற்கு ஆதரவாக இந்தியை ஆதரித்து பேசியதால் படக்குழுவினர் டென்சன் ஆனார்களா? அல்லது சுய சினிமா புராணத்தை நீண்ட நேரத்தை பேசியதால் படக்குழு துண்டு சீட்டு கொடுத்தார்களா என்று அனைவருக்கும் ஒரு கேள்வி எழுகிறது. மேலும் ஒரு மூத்த நடிகர் இப்படி பேசலாமா என்று சிலர் முணுமுணுத்தனர்.

கர்நாடகாவில் இரண்டு கார்கள் மோதியதால் பயங்கர விபத்து! சம்பவ இடத்திலேயே 9 தமிழர் உட்பட 13 பேர் பலி!

0

கர்நாடகாவில் இரண்டு கார்கள் மோதியதால் பயங்கர விபத்து! சம்பவ இடத்திலேயே 9 தமிழர் உட்பட 13 பேர் பலி!

கர்நாடக மாநிலம் குனிக்கல் பகுதியில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே 13 பேர் உயிரிழந்த கோரமான விடபத்து நடந்துள்ளது.

தர்மஸ்தலா கோயிலுக்கு ஓசூரைச் சோர்ந்த 9 பேர் சுற்றுலா சென்றுவிட்டு சொந்த ஊரை நோக்கி காரில் திரும்பி கொண்டிருந்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை கர்நாடகா குனிக்கல் பகுதியில் வேகமாக சென்று கொண்டிருந்த கார் எதிரே வந்த காரின் மீது நேருக்கு நேர் பயங்கர சத்தத்துடன் மோதியது.

இவ்விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 9 பேர் உட்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அதிகாலையில் விபத்து நடந்திருப்பதால் ஓட்டுனரின் தூக்கத்தால் கவனம் இல்லாமல் விபத்து நடந்திருக்கலாம் அல்லது சாலை விதிமுறையை மீறி நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

விபத்து நடந்த இடத்தை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சில வாரங்களுக்கு முன்பு கேரள பேருந்தும் டைல்ஸ் லோடு ஏற்றிவந்த லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 21 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் சாலை விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அரசு விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் பல விபத்துகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சிங்கத்தின் குகையில் சிங்க பெண்கள்!

0

சிங்கத்தின் குகையில் சிங்க பெண்கள்!

2020 ஆம் ஆண்டுக்கான மகளிர் இருபது ஓவர் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியுடன் இந்திய மகளிர் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

மகளிருக்கான 7 ஆவது இருபது ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவருகிறது. இந்தியா அணி இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் அரையிறுதி ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டது. இந்நிலையில் இத்தொடரின் விதிப்படி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்திய மகளிர் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இதனை தொடர்ந்து இரண்டாவது அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியும் ஆஸ்திரேலிய அணியும் மோதின. நிர்ணயிக்கப்பட்ட இருபது ஓவரில் ஆஸ்திரேலிய அணி 134 ரன்கள் குவித்தது. இதனை தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்துகொண்டிருந்தது. அப்போது மீண்டும் மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லீவிஸ் விதியைப்பயன்படுத்திய நடுவர்கள் போட்டியை 13 ஓவர்களாக குறைத்தனர்.

இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவியது. ஆண்கள் கிரிக்கெட் உலகைப்போல் மகளிர் கிரிக்கெட்டிலும் ஆதிக்கம் செலுத்தி வரும் ஆஸ்திரேலியா 4 முறை இருபது ஓவர் உலகக்கோப்பையை வென்றுள்ளது. இந்நிலையில் இந்த முறை தனது சொந்த மண்ணில் இறுதிப் போட்டியை விளையாட உள்ளது, அந்த அணிக்கு பெரிய சாதகமாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தொடக்கம் முதலே இந்த தொடரில் அசத்திவரும் இந்திய அணி இருபது ஓவர் மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. மேலும் இத்தொடரின் முதற்போட்டியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை வென்று தொடரில் தோல்வியே சந்திக்காத அணியாகவும் விளங்கிவருகிறது.

வரும் மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் தினத்தன்று மெல்போர்ன் நகரில் நடக்கும் இறுதிப்போட்டியில் சிங்கத்தின் குகையில் சிங்கத்தை சந்திக்கும் இந்திய மகளிர் கோப்பையை வென்று சாதிப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..