Monday, July 14, 2025
Home Blog Page 3375

குட் நியூஸ்! தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை!

குட் நியூஸ்! தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை!

தமிழகத்தில் காந்தி ஜெயந்தி, சரஸ்வதி பூஜை உள்ளிட்ட பண்டிகைகள் தொடங்குகிறது. இதை முன்னிட்டு அக்டோபர் 1 முதல் 5ம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக கூறியுள்ளனர். பண்டிகை காலம் முடிந்த பிறகு மேலும் அக்டோபர் 6ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு வழக்கம்போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையெடுத்து 1ஆம் வகுப்பு  முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுகள் தொடங்குகிறது. செப்டம்பர் 26-ல் தொடங்கி 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மேலும் 11ம் வகுப்பு  மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 23 முதல் 30 வரை காலாண்டு தேர்வுகள் நடைபெறுகிறது. பள்ளி மாணவர்களுக்கு செப்., 30 காலாண்டு தேர்வு முடியும் நிலையில், தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.காலாண்டு தேர்வுக்குப் பின் ஒரு வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். பின்பு அக்டோபர் 6- ல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

முதலாளியாக இருந்தவர் தொழிலாளியாக மாறியதால் தற்கொலை ! இதற்கு காரணம் என்ன?

முதலாளியாக இருந்தவர் தொழிலாளியாக மாறியதால் தற்கொலை ! இதற்கு காரணம் என்ன?

சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள ஆண்டிப்பட்டி பனங்காடு இலைக்கடை சந்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 40). இவருடைய மனைவி பிரேமா (வயது 30). இந்த தம்பதிகளுக்கு  ஹாசினி (வயது 9) மற்றும் ஜோவியா (வயது 5) என்ற 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் மணிகண்டன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சொந்தமாக வெள்ளி கம்பி மிஷின் வைத்து நடத்தி வந்துள்ளார்.

மேலும் மணிகண்டன் குடிப்பழக்கத்திற்கு  அடிமையானவர். இதனிடையே மது குடிக்கும் பழக்கத்தால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அவரால் தொடர்ந்து தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது, இதைதொடர்ந்து  தனது கம்பி எந்திர பட்டறையை மூடி விட்டார்.அவர் மேலும் வேறொரு பட்டறைக்கு  சென்று வேலை  செய்து வந்துள்ளார்.

முதலாளியாக இருந்த மணிகண்டன் தொழிலாளியாக மாறியுள்ளார்.இதனால்  கடந்த சில நாட்களாக மனம் சோர்ந்து இருந்தார். இந்த நிலையில் மாடி வீட்டில் யாரும் இல்லாத போது அங்கு சென்று மின்விசிறியில் சேலையால்   தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கொண்டலாம்பட்டி போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் கௌரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

21 வயது நிரம்பியவரா நீங்கள்? இன்றே விண்ணப்பியுங்கள்! அரசின் புதிய மானிய திட்டம்!

0

21 வயது நிரம்பியவரா நீங்கள்? இன்றே விண்ணப்பியுங்கள்! அரசின் புதிய மானிய திட்டம்!

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை  இன்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார். அதில் பல புதிய அம்சங்களுக்கு பட்ஜெட் ஒதுக்கி உள்ளார். இந்த வருடம் ரூ 10 ஆயிரத்து 696 கோடி ரூபாய்க்கு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். இதில் மத்திய அரசு 1729 கோடி வழங்க இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் மத்திய அரசு கடன் தொகையாக 500 கோடி தரலாம் என எதிர்பார்ப்பதாகவும் கூறினார். அத்தோடு வெளியில் கடன் பெற மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் ரூ 1889 கோடி வரை கடன் பெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.அந்தவகையில் புதிய திட்டங்களையும் அமல்படுத்தி நிதி ஒதுக்கப்படும் என கூறினார்.

அந்தவகையில், சென்னை மற்றும் புதுச்சேரி இடையே பயணிகள் கப்பல் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். காரைக்காலில் இருந்து இலங்கை காங்கேசன்  துறைமுகத்திற்கு பயணிகள் சரக்கு கப்பல் சேவை அமல்படுத்தப்படும். இலவச பாட புத்தகங்கள்,சீருடை ,மதிய உணவு திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

இதுபோல பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்க இருப்பதாக கூறினார். அத்தோடு 21 வயது முதல் 57 வயது வரை உள்ள குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூபாய் ஆயிரம் வழங்குவதாக தெரிவித்தார். குறிப்பாக வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள இல்லத்தரசிகளுக்கு இந்த ரூ.1000 கட்டாயம் வழங்கப்படும் என உறுதி அளித்தார்.

பிளஸ் 1 மாணவனை இழுத்து  ஓடிசென்ற பள்ளி ஆசிரியை!..போலீசாருக்கு  புகார் கொடுத்த பெற்றோர்கள்?

பிளஸ் 1 மாணவனை இழுத்து  ஓடிசென்ற பள்ளி ஆசிரியை!..போலீசாருக்கு  புகார் கொடுத்த பெற்றோர்கள்?

திருச்சி மாவட்டம் துறையூரில் ஒரு தனியார் பள்ளி ஒன்று  செயல்பட்டு வருகிறது.இப்பள்ளியில் சிக்கத்தம்பூரைச் சேர்ந்தவர் தான் சர்மிளா ஆசிரியை.இவருடைய வயது 26. அதே ஊரை சேர்ந்த  மாணவன் ஒருவன் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளான்.

கடந்த வாரம் பள்ளி ஆசிரியை மற்றும் அந்த மாணவன் இருவரும் காணாமல் போனார்கள்.இந்நிலையில் சம்பவத்தன்று பள்ளி மாணவன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவனின் பெற்றோர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தன் மகனை விரைவில் மீட்டு தருமாறு கண்ணீர் விட்டு கதறினார்கள்.பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் பல அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது.இந்நிலையில் அந்த பள்ளி மாணவனை தான் வகுப்பு ஆசிரியை தன்னுடன் அழைத்து சென்றது வெளிச்சத்திற்கு வந்தது.

அதன் அடிப்படையில் பள்ளி மாணவன் மற்றும் ஆசிரியை எங்கு இருக்கிறார் என அவர்களது செல்போன் எண்ணை வைத்து போலீசார்கள் தொடர்ந்து  கண்காணிப்பில் ஈடுபட்டுவந்துள்ளார்கள் .அப்போது இருவரும் தஞ்சாவூர் மற்றும்  திருவாரூர்ஆகிய பல்வேறு ஊர்களுக்கு சுற்றி திரிந்து வருவது தெரிய வந்தது.

இதனை அறிந்த போலீசார்கள் எடமலைப்பட்டிபுதூருக்கு விரைந்து சென்று அங்கு தோழியின் வீட்டில் தங்கிருந்த சர்மிளா மற்றும் பள்ளி மாணவனை மீட்டனர்.பின் அவர்கள் இருவரையும் துறையூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரிக்க தொடங்கினார்கள்.இந்த விசாரணையில் இருவரும் தஞ்சை பெரிய கோவிலில் திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது.

பின் இருவரும் தோழியின் வீட்டில் தஞ்சம் அடைந்தது தெரிந்தது.மேலும் திருமண வயதை அடையாத பள்ளி மாணவனை திருமணம் செய்த சர்மிளா மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அந்த ஆசிரியை கைது செய்தார்கள் .பின்னர் அவரை திருச்சி மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அதன்படிஅவருடன் சென்றிருந்த  பள்ளி மாணவனை மீட்டு  பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.மாணவருக்கு கல்வி கற்று  தரும் ஆசிரியர்களே அழைத்து சென்று திருமணம் செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்திவுள்ளது.

கூகுள்பே போன்பே பயன்படுத்துபவர்களா நீங்கள்:? அப்போ இதற்கும் இனி கட்டணம்!!

கூகுள்பே போன்பே பயன்படுத்துபவர்களா நீங்கள்:?அப்போ இதற்கும் இனி கட்டணம்!!

கார்டு(card) மூலம் மட்டுமே பணம் பரிவர்த்தனை செய்யும் பல வளர்ந்த நாடுகளுக்கு இடையில்,கூகுள்பே போன்பே, பேடிஎம் என யூபிஐ பணவர்த்தனையில் இந்தியாவானது முன்னிலை வகிக்கின்றது.ஏன் இந்தியாவின் பணப்பரிவர்த்தனை
கட்டமைப்பை அடுத்த தளத்திற்கு கொண்டு சென்றுள்ளது என்றே கூறலாம்.
அதாவது கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு டெல்லி, மும்பை,சென்னை,பெங்களூர் ஹைதராபாத் என முக்கிய பெருநகரங்களில் மட்டுமே யூபியை பணவர்த்தனைகள் இருந்தன.

ஆனால் தற்போது இந்தியாவின் கிராமப்புறங்கள் முதல் கொண்டு போன்பே,கூகுள்பே பேடிஎம், அமேசான்பே போன்ற யுபிஐ அஃப் பண பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படுகின்றது.
அதாவது இந்த யுபிஐ பரிவர்த்தனைகளை சுமார் 1.2 பில்லியன் மொபைல் பயன்பாட்டாளர்கள் பயன்படுத்துகின்றன என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றது.

இந்த யுபிஐ பரிவர்த்தனைக்கு தற்போதுவரை எந்தவித கட்டணமும்
வசூலிக்கப்படுவதில்லை
இதன் காரணமாகவே,யுபிஐ பரிவர்த்தனைகள் இந்தியாவில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றது.
இந்நிலையில் தற்போது ரிசர்வ் வங்கியானது இந்த யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

யுபிஐ பரிவர்த்தனையானது ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனையை போன்றது என்றும்,ஐஎம்பிஎஸ்-ல் உள்ள கட்டணங்களை போன்று யூபிஐ பரிவர்த்தனைகளுக்கும் கட்டணங்கள் இருக்க வேண்டும் என்றும், வெவ்வேறு தொகையின் வரம்புகளின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டு கட்டணம் விதிக்கப்படலாம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கட்டபொம்மன் பெயரா? மத்திய அரசின் புதிய அறிவிப்பு?

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கட்டபொம்மன் பெயரா? மத்திய அரசின் புதிய அறிவிப்பு?

அதிமுக ஆட்சியில் இருந்தபோது பட்ஜெட் கூட்டத்தொடரில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான பட்ஜெட் ஒதுக்கினர். 2014 ஆம் ஆண்டு பட்ஜெட் ஒதுக்கப்பட்டு மூன்றாண்டுகள் கழித்து 2019 ஆம் ஆண்டு பிரதமர் மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார். அவ்வாறு அடிக்கல் நாட்டியும் மருத்துவமனை முழுவதுமாக கட்டி முடியவில்லை.

தற்பொழுது ஆட்சி மாறிய சூழலில்  ஜப்பான் நிறுவனம்1500 கோடி நிதி ஒதுக்கி இருப்பதாக மதுரை எம் பி வெங்கடேசன் சில மாதங்களுக்கு முன்பு கூறினார். இவ்வாறு இருக்கும் சூழலில் மதுரையில் தொடங்க இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் மீதமுள்ள 23 மருத்துவமனைகளின் பெயர்களை மத்திய அரசு மாற்றி அமைப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனை என்ற பெயரை மாற்றி சுதந்திரப் போராட்டத்திற்காக போராடிய வீரர்களின் பெயர்களை வைப்பதாக தெரிவித்துள்ளனர். வரலாற்று நினைவுச் சின்னங்கள் மற்றும் தியாகிகள் ,உள்ளூர் போராட்ட வீரர்கள் ஆகிய பிரிவுகளின் அடிப்படையில் இருந்து நான்கு பெயர்களை பரிந்துரைக்கலாம் என தெரிவித்துள்ளனர். அவ்வாறு பரிந்துரை அடிப்படையில்  வைக்கப்படும் பெயர்கள் ஏன் வைக்க வேண்டும் என்ற காரணங்களையும் தெளிவாக கூற வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

தற்போது உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை மட்டுமின்றி கட்டுமான பணியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் இந்தப் பெயர் மாற்றம் அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளனர். அந்த வகையில் நமது  தமிழ்நாட்டில் இருந்து இந்திய விடுதலைக்காக போராடிய மருதநாயகம் ,வேலு நாச்சியார் ,வீரபாண்டிய கட்டபொம்மன், மருதுபாண்டியர் ,வாஞ்சிநாதன் திருப்பூர் குமரன், பாரதியார் உள்ளிட்டர் பெயர்கள் பரிந்துரைக்கப்படலாம்.

குரூப் 1 தேர்வாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!..குரூப் 1 தேர்வுக்கு இன்றுடன் கால அவகாசம் முடிவு!..

குரூப் 1 தேர்வாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!..குரூப் 1 தேர்வுக்கு இன்றுடன் கால அவகாசம் முடிவு!..

குரூப் 1 தேர்வு  அறிவிப்பனையை அரசு பணியாளர்கள் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள 92 பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடத்தப்பட இருக்கின்றது. குரூப் 1 தேர்வில் விண்ணப்பிப்பதற்கு தேவையான கல்வி தகுதி வயதுவரம்பு குறித்த முழு விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் குடிமை பணி, காவல் பணி,வணிகவரி பணி, கூட்டுறவு பணி, பொதுப்பணி துறை, ஆகியவற்றில் உள்ள துணை ஆட்சியர், துணை காவலர் உதவி ஆணையர், துணை பதிவாளர், உதவி இயக்குனர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட பணியிடங்கள் குரூப் 1 தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

 இந்த குரூப் 1 தேர்வு முதல் நிலை தேர்வு அக்டோபர் 30ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்திருந்தது. இந்நிலையில் இப்பணி இடங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தெரிவித்திருந்தது.அதன்படி இன்று 22/08/2022 கடைசி நாள் என்றும் மேலும் அச்சேவை முற்றிலும் நிறுத்தப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.

மேலும் ஆகஸ்ட் 27 முதல் 29ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் எனவும்,இந்த தகவலை கருத்தில் கொண்டு விரைவில் செயல்படுமாறு தமிழ்நாடு அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

‘எப்படி லீக் ஆகுதுன்னே தெரியலயே…’ வாரிசு இயக்குனர் போட்ட கண்டீஷன்!

0

‘எப்படி லீக் ஆகுதுன்னே தெரியலயே…’ வாரிசு இயக்குனர் போட்ட கண்டீஷன்!

இயக்குனர் வம்சி இயக்கி வரும் வாரிசு படத்தின் ஷூட்டிங் தற்போது நடந்து வருகிறது.

விஜய்யின் 66 ஆவது படமான ‘வாரிசு’ படத்தை இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார். இந்த படத்தை தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்தில் விஜய்யோடு சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். இந்த படத்தின் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ரிலீஸ் ஆக உள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக ‘வாரிசு’ படத்தின் ஷூட்டிங் செட்டில் இருந்து சில வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் கசிந்து வருகின்றன. படப்பிடிப்புத் தளத்தில் இருந்து வெளியாகும் வீடியோக்களால் இயக்குனரும், தயாரிப்பாளரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து இதுபோல மீண்டும் தவறுகள் நடக்காமல் இருப்பதற்காக இயக்குனர் வம்சி புதிய உத்தரவு ஒன்றை படப்பிடிப்புக் குழுவினருக்கு இட்டுள்ளாராம்.

அதன் படி இனிமேல் படப்பிடிப்பு தளத்துக்குள் எந்தவொரு தொழில்நுட்பக் கலைஞரும், நடிகர் நடிகைகளும் தங்கள் செல்போனைக் கொண்டு வரக் கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளாராம். இந்த உத்தரவு நடிகர் விஜய்க்கும் சேர்த்துதான் என சொல்லப்படுகிறது.

விறுவிறுப்பாக நடந்து வரும் ’வாரிசு’ படப்பிடிப்பை வம்சி நடத்தி வரும் நிலையில் அக்டோபர் மாதத்தில் மொத்த படப்பிடிப்பும் நிறைவு பெறும் என சொல்லப்படுகிறது. இதையடுத்து ஒரு குறுகிய பிரேக் எடுத்துக் கொண்டு விஜய் உடனடியாக லோகேஷ் படத்தில் கவனம் செலுத்த உள்ளதாக சொல்லப்படுகிறது.

‘வாரிசு என்பதற்காக மட்டும் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்’ அதிதி ஷங்கருக்கு ஆதரவாக அருண் விஜய்

0

‘வாரிசு என்பதற்காக மட்டும் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்’ அதிதி ஷங்கருக்கு ஆதரவாக அருண் விஜய்

நடிகை அதிதி ஷங்கர் அடுத்தடுத்து பெரிய பட்ஜெட் படங்களில் கதாநாயகியாக வாய்ப்புகளை பெற்று வருகிறார்.

இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர் தமிழ்ப் படத்தில் ஹீரோயினாக விருமன் படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படம் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள நிலையில் அடுத்து சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தில் நடிக்கிறார். தனது சினிமா கேரியரின் ஆரம்பகட்டமே அவருக்கு முன்னணி நடிகர்களோடு நடிக்கும் வாய்ப்போடு அமோகமாக தொடங்கியுள்ளது.

இதற்கெல்லாம் அவர் இயக்குனர் ஷங்கரின் மகள் என்ற ப்ராண்ட்தான் உதவுகிறது என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும் அதிதிக்கு விருமன் திரைப்படத்தில் வாய்ப்புக் கிடைக்க, இயக்குனர் ஷங்கர் மற்றும் நடிகர் சூர்யா (விருமன் படத்தின் தயாரிப்பாளரும் இவரே) ஆகியோருக்கு மேனேஜராக இருக்கும் தங்கதுரை என்பவர்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. தமிழ் சினிமாவில் பல்வேறு பிரபல நடிகைகளுக்கு அவர் மேனேஜராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வாரிசு நடிகை என்று விமர்சிக்கபடும் அதிதிக்கு மற்றொரு வாரிசு நடிகரான அருண் விஜய் ஆதரவு அளித்துள்ளார். மேலும் “அவர் வாரிசு நடிகர்கள் என்பதற்காக ரசிகர்கள் படம் பார்க்க வரமாட்டார்கள். திறமை வேண்டும். மேலும் வாரிசு ஆக இருப்பதால் அவர்களின் தந்தையின் பெயரைக் காப்பாற்ற வேண்டும் என்ற கூடுதல் பொறுப்பும் உள்ளது. அதிதிக்குள் பல்வேறு திறமைகள் உள்ளன. அவருக்கு என் வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.

ஸ்ரேயா கோஷல் குரலில் பொன்னியின் செல்வன் அடுத்த பாட்டு… ரிலீஸ் எப்போ? ரஹ்மான் பதில்

0

ஸ்ரேயா கோஷல் குரலில் பொன்னியின் செல்வன் அடுத்த பாட்டு… ரிலீஸ் எப்போ? ரஹ்மான் பதில்

பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றுள்ளன.

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது பொன்னியின் செல்வன் முதல் பாகம். படத்தின் ப்ரமோஷனாக இதுவரை போஸ்டர்கள் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.

அதே போல கடந்த ஜூலை 30 ஆம் தேதி ‘பொன்னி நதி பாக்கணுமே’ என்ற பாடல் ரிலீஸாகி கவனம் பெற்றது. இந்த பாடலை ஏ ஆர் ரஹ்மான் பாட இளங்கோ கிருஷ்ணன் எழுதி இருந்தார். சோழர் கால இசை மற்றும் பாடல் போல இல்லாமல் வெஸ்டர்னாக பாடல் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தாலும், பாடல் இன்ஸ்டண்ட் ஹிட் ஆனது. குறிப்பாக கன்னட வெர்ஷன் மற்ற மொழி பாடல்களை விட அதிகமாக ரசிகர்களைக் கவர்ந்தது.

இதையடுத்து சில தினங்களுக்கு முன்னர்  செகண்ட் சிங்கிள் பாடலான சோழா சோழா பாடல் வெளியானது. இந்த பாடல் சோழர்களின் வெற்றிக்குப் பிந்தைய கொண்டாட்டத்தை சொல்லும் துள்ளலிசை பாடலாக அமைந்தது. முதல் பாடல் போலவே இந்த பாடலும் ரசிகர்களைக் கவர்ந்தது. ஆதித்த கரிகாலனை மையப்படுத்தியதாக இந்த பாடல் அமைந்தது.

இதையடுத்து ஸ்ரேயா கோஷல் குரலில் அடுத்து மூன்றாவது பாடல் செப்டம்பர் முதல் வாரத்தில் வெளியாகும் என ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கையில் ரஹ்மான் டிவிட்டரில் கூறியுள்ளார். இதையடுத்து அந்த பாடலின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.