இருமலை விரட்டியடிக்க இதோ ஒரு துண்டு இஞ்சி போதும்!! எந்தவித மருந்து மாத்திரையும் தேவையில்லை!!

இருமலை விரட்டியடிக்க இதோ ஒரு துண்டு இஞ்சி போதும்!! எந்தவித மருந்து மாத்திரையும் தேவையில்லை!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சளி காய்ச்சல் என தொடங்கிய இருமல் வரை அனைத்தையும் சந்தித்திருப்போம். குறிப்பாக பருவநிலை மாற்றம் பொழுது பெரும்பாலானோருக்கு சளி மற்றும் காய்ச்சல் ஏற்படுகிறது.

இவ்வாறு சளி மற்றும் காய்ச்சல் ஏற்படும் பட்சத்தில் ஏதேனும் மருந்து மாத்திரை உள்ளிட்டவற்றை சாப்பிட்டு குணப்படுத்திக் கொள்ளலாம்.

ஆனால் இருமல் ஏற்பட்டால் சற்று குணமாவது கடினம் தான். பலரும் பல வகையான மருந்துகளை குடித்தும் அதற்கு தீர்வு கிடைக்காமலே இருப்பர்.

இவ்வாறு இருமல் ஏற்படும் பொழுது மருந்து மாத்திரை போன்றவற்றை எடுத்துக் கொள்ளாமல் நம் வீட்டில் உள்ள எளிமையான பொருளை வைத்து ஒரே நாளில் குணப்படுத்தி விடலாம்.

தேவையான பொருட்கள்:
இஞ்சி
எலுமிச்சை சாறு
தேன்
செய்முறை:
பெரும்பாலும் சளி காய்ச்சல் இருமல் போன்ற அனைத்திற்கும் இஞ்சி ஓர் அரும் மருந்து. இந்த மூன்றை குணப்படுத்த இஞ்சி அழகு நல்ல ஒரு நிவாரணமாக காணப்படும்.

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும். பின்பு அந்த தண்ணீரில் சிறிதளவு இஞ்சி தட்டி போட்டு கொதிக்க விட வேண்டும். நன்றாக கொதித்ததும் அதனை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இறுதியாக அதனுடன் சிறிதளவு எலுமிச்சைச்சாறு மற்றும் தேன் கலந்து கொள்ள வேண்டும். இதனை வாரத்தில் இரண்டு முறை குடித்து வர நெஞ்சில் உள்ள சளி மற்றும் இருமல் என அனைத்தும் விரைவிலேயே குணமாகும்.

புதிய யுபிஐ பரிவர்த்தனை வசதி அறிமுகம்!! வங்கி வாடிக்கையாளர்களுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி!!

Introducing new UPI transaction facility!! Happy news for bank customers!!

புதிய யுபிஐ பரிவர்த்தனை வசதி அறிமுகம்!! வங்கி வாடிக்கையாளர்களுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி!!

தற்போது அனைத்துமே டிஜிட்டல் மயமாக மாறி கொண்டு வருகிறது. நாமும் அதற்கேற்றவாறு மாடனாக மாறிக் கொண்டிருக்கிறோம். எனவே, பண பரிவர்த்தனை வசதிகளும் டிஜிட்டலாக மாறி யுபிஐ மூலம் நடந்து வருகிறது.

இந்த டிஜிட்டல் பண பரிமாற்றத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல எஸ் வங்கியானது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, ரூபே கிரெடிட் கார்டு மூலமாக யுபிஐ கட்டணம் செலுத்த வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, இனி வாடிக்கையாளர்கள் அனைவரும் எஸ் பேங்க் ரூபே கிரெடிட் கார்டு மூலம் தங்களது போன் பே மற்றும் கூகுள் பே ஆகியவற்றை இணைத்து கொள்ளலாம்.

இதனால் வாடிக்கையாளர்கள் கூடுதலான பாதுகாப்பு வசதிகளோடு கிரெடிட் கார்டை பயன்படுத்தி பண பரிமாற்றத்தை செய்து கொள்ளலாம். இந்த புதிய வசதியால் கிரெடிட் கார்டிற்கான கால அம்சத்தை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ள முடியும்.

சிலர் ரூபே கார்டு இல்லாத எஸ் வங்கியின் கிரெடிட் கார்டு வாடிக்கையாளராக இருப்பார்கள். அவ்வாறு இருப்பவர்கள் அனைவரும் உடனடியாக விர்ச்சுவல் எஸ் வங்கியின் ரூபே கிரெடிட் கார்டை வாங்கி கொள்ளலாம்.

அதன் பிறகு தங்களது போன் பே மற்றும் கூகுல் பே யுபிஐ செயளிகளோடு இணைத்துக் கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே, இந்த யுபிஐ வசதி வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கொண்டு வரப்பட்டுள்ளது என்று எஸ் வங்கி தெரிவித்துள்ளது.

இனி ஆப்ரேஷன் தேவையில்லை.. 1 வாழைப்பழம் போதும் மூல நோயிலிருந்து விடுபட!!

இனி ஆப்ரேஷன் தேவையில்லை.. 1 வாழைப்பழம் போதும் மூல நோயிலிருந்து விடுபட!!
நம்மில் சிலருக்கு மூலநோய் இருக்கும். இந்த மூலநோயை குணப்படுத்த பலவிதமான மருந்துகளை பயன்படுத்தி இருப்போம். பலவிதமான மாத்திரைகளை எடுத்தும் பயன் இல்லாமல் போயிருக்கும். பலவிதமான சிகிச்சை பெற்றும் குணம் பெறாத இந்த மூல நோயை ஒரே ஒரு இரவில் குணப்படுத்துவதற்கு அருமையான வீட்டு மருத்துவ முறையை இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்த மருத்துவம் செய்ய தேவையான பொருட்கள்…
* படிகாரம்
* வாழைப்பழம்
* தேன்
மூலநோயை சரிசெய்யும் மருந்தை தயார் செய்யும் முறை…
முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தை(Pane) வைத்துக் கெள்ள வேண்டும். பாத்திரம் சூடான பிறகு இதில் படிகாரத்தை சிறிது சிறிதாக இடித்து போட்டுக் கொள்ளவும்.
அனைத்து படிகாரமும் கரைந்து பாகு பதத்திற்கு வந்திருக்கும். பின்னர் இதை இறக்கி வைத்துக் கொள்ளவும். பின்னர் இதை ஆற வைக்கவும். இது ஆறிய பிறகு இதை ஒரு உரலில் போட்டு பொடியாக்கி கொள்ளவும்.
பின்னர் வாழைப்பழம் ஒன்றை எடுத்துக் கொள்ளவும். வாழைப்பழத்தின் நடுவே சிறிதாக கத்தியை வைத்து கோடு போல அறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு ஸ்பூன் அளவு தேன் எடுத்து வாழைப்பழத்தில் அறுத்துவிட்ட இடத்தில் முழுவதுமாக தேய்க்க வேண்டும். பிறகு இடித்து வைத்துள்ள படிகாரப் பொடியை சிறிதளவு எடுத்து அந்த தேனின் மேல் தூவி விட வேண்டும். மூலநோயை சரி செய்யும் மருந்து தயாராகி விட்டது.
இந்த மருந்தை எடுத்துக்கொள்ளும் பொழுது பத்தியத்தை பின்பற்ற வேண்டும். நீங்கள் அதிகமாக காய்கறிகள், கீரைகள் சாப்பிட வேண்டும்.  தண்ணீர் அதிக அளவு குடிக்க வேண்டும்.
எண்ணெய் பலகாரங்கள், துரித உணவுகள், மசாலா பொருட்கள் எதுவும் சாப்பிடக் கூடாது. காரம் சேர்த்துக் கொள்ள கூடாது. இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் மருந்தை சாப்பிடுவதற்கு முன்பும் சாப்பிடும் பொழுதும் மேற்கூறியவற்றை நியாபகத்தில் வைத்துக் கொள்ளவும். இந்த மருந்தை வெறும் வயிற்றில்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
மூலநோய் சமீபத்தில் வந்தது என்றால் நீங்கள் இந்த மருந்தை நான்கு நாட்கள் எடுத்தக் கொண்டால் போதும். அதுவே நீண்ட நாட்களாக மூலநேயால் அவதிப்பட்டு வந்தால் தொடர்ந்து ஒரு வாரம் முழுவதும் பயன்படுத்த வேண்டும். இந்த மருந்தை சாப்பிட்ட பிறகு டீ, காபி குடிக்கக் கூடாது. தேவைப்பட்டால் தண்ணீரை சூடுபடுத்தி வெதுவெதுப்பாக குடிக்கலாம். இந்த பதிவில் கூறப்பட்டருக்கும் மருந்தை சாப்பிட்டு அரை மணி நேரத்திற்கு பிறகு நாம் உணவு எடுத்துக் கொள்ளலாம்.

சுழற்பந்தில் கலக்கிய இந்தியா! 177- இல் ஆல் அவுட் ஆன ஆஸ்திரேலியா!

சுழற்பந்தில் கலக்கிய இந்தியா! 177- இல் ஆல் அவுட் ஆன ஆஸ்திரேலியா! 

நாக்பூரில் நடந்து வரும் பார்டர் கவாஸ்கர் முதலாவது டெஸ்ட் போட்டியில் 177 ரன்களில் ஆஸ்திரேலியா அணி ஆல் அவுட் ஆனது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதில் பார்டர் கவாஸ்கர்  கோப்பைக்கான டெஸ்ட் மேட்ச் முதலில் நடத்தப்படுகிறது இதன்படி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கான முதலாவது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலத்தில் உள்ள நாக்பூர் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங்கில் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னரும், உஸ்மான் கவாஜாவும் களமிறங்கினர். இருவரும் அந்த வேகத்திலேயே வெளியேறினர் கவஜா சிராஜ் பந்து வீச்சில் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தார். வார்னர் ஷமியின் பந்துவீச்சில் போல்டானார்.

தொடக்கத்திலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணியை அடுத்து வந்த  ஸ்மித்தும் லபுஷேனும் சரிவிலிருந்து மீட்டனர். சிறப்பாக விளையாடிய லபுஷேன் 49 ரன்கள் ஸ்மித் 37 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்துவீச்சில் அவுட் ஆனார்கள். மாட் ரென்ஷாவும் ரன் ஏதும் எடுக்காமல் ஜடேஜா பந்துவீச்சில் வீழ்ந்தார்.

அடுத்து வந்த அலெக்ஸ் கேரி சிறிது நிலைத்து விளையாடி 36 ரன்களில் அஸ்வின் பந்து வீச்சில் வெளியேறினார்.  அடுத்து வந்தபேட் கம்மின்ஸ் ஆறு இடங்களில் வெளியேறினார். மறுமுனையில் பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் நிலைத்து விளையாடினார். அவரும் அடுத்து 31 ரன்களில் வெளியேறினார்.

இறுதியில் ஆஸ்திரேலியா அணி 127 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்தது. அசத்தலாக பந்துவீசிய ஜடேஜா 5 விக்கெட்களையும் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் தற்போது இந்திய அணி விளையாடி வருகிறது.

தற்போது இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. ரோகித் சர்மா 56 ரன்கள்களுடனும், அஸ்வின் ரன் ஏதும் எடுக்காமலும் விளையாடி வருகின்றனர்.

பால் விலை அதிரடி உயர்வு? அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Milk price drastic increase? A sudden announcement by the government!

பால் விலை அதிரடி உயர்வு? அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பால் விலையில் மூன்று ரூபாயாக குறைத்தனர்.ஆனால் பாலினால் செய்யப்படும் பொருட்களின் விலைகள் அனைத்தும் உயர்ந்தது.அதனையடுத்து பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பாக பால் கொள்முதல் விலையை உயர்த்தி தருமாறு சில தினங்களுக்கு முன்பு போராட்டம் நடைபெற்றது.

அந்த போராட்டத்தின் காரணமாக தமிழக அரசு பால் கொள்ளுமுதல் விலையை உயர்த்தி உத்தரவிட்டது. அந்த அடிப்படையில் பால் கொள்முதல் விலை ரூ 32 ல்லிருந்து 35 ஆக உயர்த்தினர்.அதனையடுத்து எருமைப்பால் விலையை 41 லிருந்து 45ஆக உயர்ந்துள்ளது.

மேலும் ஆவின் நிறுவங்களால் விற்கப்படும் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் விலை 52 ஆக இருந்து தற்போது 62 ஆக உயர்த்தப்பட்டுள்ளனர். இந்த திடீர் பால் விலை உயர்வினால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்பட்டைந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து தற்போது கேராளாவில் அரசு துறை நிறுவனமான மில்மா மூலம் பால் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.பால் உற்பத்தியாளர்கள் பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இந்த கோரிக்கையை அனைத்தும் நியாயமாக இருக்கின்றத என்பதனை நிர்ணயம் செய்ய குழு ஓன்று அமைக்கப்பட்டது.அந்த குழுவினர் இது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.அதில் பால் விற்பனை விலையை லிட்டருக்கு ரூ 7 முதல் ரூ 8 வரை உயர்த்தலாம் என தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த கோரிக்கை மற்றும் குழு அளித்த விளக்கத்தின் அடிப்படையில் அரசு அதிகாரிகள் முடிவு செய்ய உள்ளனர்.அதனை தொடர்ந்து இன்று தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் கேரளாவில் பால் விலையை உயர்த்துவது குறித்து முடிவு செய்யப்படவுள்ளது.அதன் பிறகு தான் பால் விலையில் லிட்டருக்கு எத்தனை ரூபாய்  உயரும் என்று தெரியவரும் என கூறப்பட்டுள்ளது.

அட! இவர் ஒருவர் போதுமே! இனி எதுக்கு ஹாஸ்பிட்டல்? சமையல் அறையில் உள்ள மருத்துவர்…

அட! இவர் ஒருவர் போதுமே! இனி எதுக்கு ஹாஸ்பிட்டல்? சமையல் அறையில் உள்ள மருத்துவர்…

இஞ்சி ஒரு இயற்கை மருத்துவ பொருள் நாம் அறிந்தது தான். ஆனால் கால் கிலோ இஞ்சி இருந்த போதும் நூறு மருத்துவர்க்கு சமம். நாம இஞ்சியை டீக்கும், அசைவ உணவுக்கு மட்டுமே பயன் படுத்ததுக்கிறோம். ஆனால் பாருங்கள் இஞ்சி இருந்தால் உங்களுக்கு எவ்வளவு செலவு மிச்சம் என்று, நோய்களை நீக்குவதில் இஞ்சி சமையலறை மருத்துவர்.

இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் துர்நாற்றம் தீரும், சுறுசுறுப்பு ஏற்படும். இஞ்சியை துவையல் ஆக்கி சாப்பிட வயிற்று உப்புசம் தீரும்.

காலையில் இஞ்சி சாறில் உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும்,உடம்பு இளமை பெறும். 10 கிராம் இஞ்சி, பூண்டு, இரண்டையும் அரைத்து ஒரு கப் தண்ணீரில் கலந்து காலை மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.

இஞ்சி சாறோடு தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்து வர தொந்தி கரைந்து விடும். இஞ்சி சாறில் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட நல்ல பசி ஏற்படும்.

இஞ்சி மிளகு இரண்டையும் அரைத்து சாப்பிட ஜீரணம் ஏற்படும். இஞ்சியை வதக்கி தேன் சேர்த்து கிளறி நீர் விட்டு கொதிக்க வைத்து நீரை காலை, மாலை குடித்து வர வயிற்றுப்போக்கு தீரும்.

இஞ்சி அரைத்து நீரில் கலந்து தெளிந்த பின் நீரை எடுத்து துளசி இலை சாரை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒருவாரம் சாப்பிட வாய்வுத் தொல்லை நீங்கும். இஞ்சி சாறில் தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி கூடும்,இளமை பெருகும்.

இஞ்சி சாறுடன் வெங்காய சாறு கலந்து ஒரு வாரம் காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்து வர நீரிழிவு குறையும். இஞ்சி சாறு எலுமிச்சை சாறு வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வர ஆரம்பகால ஆஸ்துமா இரைப்பு இருமல் குணமாகும்.

முக்கிய குறிப்பு இஞ்சியை தோல் சீவிய பிறகு தான் பயன்படுத்த வேண்டும். இஞ்சி தோல் சீவி காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்து பிரிட்ஜ்-ல் வைத்தால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.

டிராக்டரில் சிக்கி ஓட்டுநர் பலி! உழவு செய்ய சென்ற இடத்தில் பரிதாபம்!

The driver was caught in the tractor and died! Pity the place that went to plough!

டிராக்டரில் சிக்கி ஓட்டுநர் பலி! உழவு செய்ய சென்ற இடத்தில் பரிதாபம்!

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள ஆலமரத்துப்பட்டி தோப்புப்பட்டியை சேர்ந்த தனுஷ்கோடி. கடந்த  சில தினங்களாக தொடர்ந்து சில தினங்களாக கன மழை  பெய்து வருகிறது. மேலும்  மழையின் காரணமாக விவசாய பணி மேற்கொள்வதற்காக சுரேஷ் என்பவர் மூலம் உழவு மேற்கொள்ளும் பணியில் தனுஷ்கோடி ஈடுபட்டிருந்தார்.

அப்பொழுது எதிர்பாராத விதமாக ஓட்டுனர் சுரேஷ் டிராக்டர் வாகனத்தில் உள்ள ரோட்டேட்டரில் சிக்கி உயிரிழந்துள்ளார்.இது குறித்து அரவக்குறிச்சி போலீசார்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது . அந்த தகவலின் பேரில் போலீசார் வழக்கு பதிவு சுரேஷ்ன் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

சனிப்பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களே! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

சனிப்பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களே! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

27.12.2020 முதல் 19.12.2023 வரைவிடாப்பிடியுடனும், விழிப்புணர்வுடனும் செயல்படும் விருச்சிக ராசி அன்பர்களே.சனியின் நாமம் : சகாய சனி சனி பார்வையிடும் இடங்கள்3ம் பார்வை7ம் பார்வை 10ம் பார்வைபஞ்சம ஸ்தானம்பாக்கிய ஸ்தானம்போக ஸ்தானம்உங்கள் ராசிக்கு தன, குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடத்தில் இருந்துவந்த சனிபகவான் இப்போது தங்களின் ராசிக்கு தைரிய, வீரிய ஸ்தானமான மூன்றாம் இடத்தில் இருக்கிறார்.

மேலும் சனி தான் இருக்கும் வீட்டில் இருந்து மூன்றாம் பார்வையாக பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக பாக்கிய ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக அயன சயன போக ஸ்தானத்தையும் பார்க்கின்றார். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். தன்னம்பிக்கையுடன் எதிலும் செயல்பட்டு எண்ணிய இலக்கை அடைவீர்கள். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.

உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். மனதிற்கு பிடித்த மனை மற்றும் வீடு வாங்கி மகிழ்வீர்கள். புதிய பயணம் மூலம் மனமாற்றம் ஏற்படும். முயற்சிக்கேற்ப தனவரவும், அங்கீகாரமும் கிடைக்கும். சிறு அலைச்சல்கள் அவ்வப்போது ஏற்பட்டு மறையும். உடன் பிறந்தவர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். குடும்ப பெரியோர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் ஆதரவான சூழல் உண்டாகும். மனதில் ஏற்படும் குழப்பங்களை மற்றவர்களிடம் பகிர்வதன் மூலம் மனதில் தெளிவு பிறக்கும்.

சனி பெயர்ச்சி பெண்களுக்கு : தந்தைவழி உறவினர்களுடன் பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை. ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தவும். தொழிலில் இதுவரை இருந்துவந்த நிலை மாறி முன்னேற்றம் அடைவீர்கள். புத்திர பாக்கியத்தை எதிர்நோக்கி கொண்டிருப்பவர்களுக்கு புத்திர பாக்கியம் தாமதப்பட்டு கைகூடும். இளைய சகோதர, சகோதரிகளின் ஒத்துழைப்பு பெரும் பங்கு வகிக்கும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும்.

சனி பெயர்ச்சி மாணவர்களுக்கு :அடிப்படை கல்வி பயிலும் மாணவர்கள் தங்களது கல்வியில் இதுவரை இருந்துவந்த நிலையில் மாற்றம் காண்பீர்கள். உடல் வலிமையை வெளிப்படுத்தும் போட்டிகளில் கலந்து கொள்வதன் மூலம் வெற்றி காண்பீர்கள். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் சிறப்பான முன்னேற்றம் அடைவீர்கள். கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்கள் தங்களது படிப்பில் நாட்டத்தை அதிகப்படுத்தவும். நண்பர்களின் பழக்க வழக்கம் அறிந்து பழகுவது நன்மை அளிக்கும்.

சனி பெயர்ச்சி உத்தியோகஸ்தர்களுக்கு :விருப்பத்துடன் கூடிய இடமாற்றம் ஏற்படும். வேலையில் இதுவரை இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கி சுபம் உண்டாகும். வேலை சார்ந்து வெளியூர் பயணம் மேற்கொள்ளும்போது அலைச்சல் ஏற்படும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு உண்டாகும். பணிபுரியும் இடங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். நெருக்கமானவர்களுக்காக மற்றவர்களின் பணிகளையும் சேர்ந்து பார்க்க நேரிடும் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

வழிபாட்டு முறை:சதுர்த்தி அன்று விநாயகர் வழிபாட்டை மேற்கொள்வதன் மூலம் முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

 

சிலிண்டர் விபத்து ஏற்பட்டால் இன்சூரன்ஸ் பாலிசி உண்டு.. உங்களுக்கு தெரியுமா? எப்படி உரிமைகோர்வது?..

சிலிண்டர் விபத்து ஏற்பட்டால் இன்சூரன்ஸ் பாலிசி உண்டு.. உங்களுக்கு தெரியுமா? எப்படி உரிமைகோர்வது?..

நாம் தினமும் சமையல் செய்ய பயன்படுத்தும் எல்.பி.ஜி கேஸ் சிலிண்டருக்கு காப்பீடு உண்டு என்பது நம்மில் பலருக்குத் தெரியாத ஒன்று.நகரத்தில் இருக்கும் மக்களாவது அவ்வப்போது இணையத்தில் படித்து எல்.பி.ஜி கான காப்பீடுகளைப் பற்றி அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் கிராமப்புறங்களில் வசிக்கும் பெரும்பாலான மக்களுக்கு இப்படி ஒன்று இருப்பதே தெரிவதில்லை.

ஒரு LPGசிலிண்டர் வாங்கி அது தீர்ந்து இன்னொரு சிலிண்டர் நம் வீட்டு வாசலில் வந்து இறங்கும் அந்த நேரம் வரை அதை பயன்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளரின் பெயரிலும் காப்பீட்டுத் தொகையும் அதனுடன் வந்து சேர்கின்றது.சிலிண்டர் விபத்து நேர்ந்து அதன் காரணமாக உயிரிழப்புகள் நேர்ந்தால் சட்டப்படி அந்த குடும்பம் ரூ.50 லட்சம் வரை சம்பந்தப்பட்ட நிறுவனத்திலிருந்து காப்பீட்டுத் தொகை பெற முடியும்.

ஒரு நபருக்கு ரூ.10 லட்சம் வரையும் இழப்பீட்டைப் பெறலாம். ஒருவேளை விபத்தால் மரணம் ஏற்பட்டால் இறந்த ஒவ்வொரு நபருக்கும் தலா ரூ.5 லட்சம் காப்பீட்டுத் திட்டத்திலிருந்து வழங்கப்படும்.மேலும் மருத்துவக் காப்பீடாக ஒரு விபத்துக்கு ரூ.15 லட்சம் வரை பெற முடியும்.கேஸ் சிலிண்டருக்கான இன்ஷூரன்ஸை சிலிண்டர் வைத்திருப்பவர்கள் எடுக்கத் தேவையில்லை. அதை சிலிண்டர் டிஸ்ட்ரிபியூட்டரே எடுத்து விடுவார்.அரசு விதிமுறையின் படி கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்பவர்கள் தங்கள் கொடுக்கும் காஸ் இணைப்புக்கு கட்டாயம் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும்.

இந்த பாலிசியின்படி இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் பிரீமியம் தொகையை வாடிக்கையாளர்களிடமிருந்துஎண்ணெய் நிறுவனங்கள் பெறக்கூடாது. பிரீமியம் செலவுகள் அனைத்தும் நிறுவனத்தையே சேரும்.இதனைத்தொடர்ந்து
எப்படி க்ளெய்ம் செய்வது என்று பார்ப்போம்.
நீங்கள் இணைப்பு வைத்திருக்கும் எண்ணெய் நிறுவனம் எடுத்திருக்கும் இன்ஷூரன்ஸ் விநியோகஸ்தர் எடுத்திருக்கும் இன்ஷூரன்ஸ் என இரண்டு இன்ஷூரன்ஸ் இருக்கும். இதில் சிலிண்டரில் விபத்து ஏதும் ஏற்பட்டால் அதை உடனடியாக விநியோகஸ்தருக்குத் தெரிவிக்க வேண்டும்.

இந்த விபத்தை நேரில் ஆய்வு செய்து அதை இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்குத் தெரிவிப்பார்.காவல் துறைக்கு அந்த விபத்தைத் தெரிவிக்க வேண்டு.இன்ஷூரன்ஸ் அதிகாரி விபத்து நடந்த இடத்தை நேரில் ஆய்வு செய்து உங்களின் உரிமைகோரவும் தொகையை நிர்ணயிப்பார். இதில் சிலிண்டர் இணைப்பு பெற்றிருக்கும் முகவரி நபரின் பெயர் ஆகியவை சரியாக இருக்க வேண்டும்.

கேஸ் டிஸ்ட்ரிபியூட்டர் வரத் காலதாமதமானால் விபத்து ஏற்பட்டு பொருள்கள் சேதம் அடைந்ததற்கான ஆதாரத்தை நீங்கள் வைத்திருக்க வேண்டும். தரை சேதம் அடைந்திருந்தால் அதை கேஸ் டிஸ்ட்ரிபியூட்டர் வரும்வரை அப்படியே வைத்திருக்கலாம் அல்லது அதைச் சரி செய்ததற்கான ரசீதை வைத்திருக்க வேண்டும்.
சிலிண்டர் இன்ஷூரன்ஸைப் பொறுத்தவரை இவ்வளவு தொகைக்குதான் உரிமைகோரவும் என எந்தவிதமான வரைமுறையும் கிடையாது.விபத்தின் தன்மையைப் பொறுத்தும் அதன் பாதிப்பைப் பொறுத்தும் உரிமைகோரவும் தொகை வித்தியாசப்படும்.

ஒரே பள்ளியில் 19 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி! பள்ளிகள் மூடப்படுமா?

19 students in the same school confirmed corona infection! Will schools be closed?

ஒரே பள்ளியில் 19 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி! பள்ளிகள் மூடப்படுமா?

தமிழகத்தில் ஒரு மாத கோடை விடுமுறைக்கு பின்னர், பள்ளிகள் கடந்த மாதம் ஜூன் 13-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி ஒரு சில நோய் தொற்றுகள் புதிதாக ஏற்பட தொடங்கியுள்ளது. இந்நிலையில் பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்புவதற்கு அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும்  அனைத்து பள்ளிகளிலும் முககவசம் கட்டாயமாகப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு சில பள்ளிகளில் முக கவசம் அணியாவிட்டாலும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் பெற்றோர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க விட்டால் குழந்தைகளுக்கு எளிதாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படும் எனவும் பெற்றோர்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

இதனால் ஒரு சில தனியார் பள்ளி நிறுவனங்கள் நேரடி வகுப்புகளை சுழற்சி முறையில் மாற்றலாம் எனவும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்ற அடிப்படையில் வகுப்புகள் நடத்தலாம் எனவும் கல்வி நிறுவனங்கள் பெற்றோர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படித்து வரும் சில மாணவர்களுக்கு காய்ச்சல், சளி பாதிப்பு இருந்து வந்தது.

மேலும் இதைத் தொடர்ந்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது அந்த முடிவில் 12 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 170 மாணவர்கள் படிக்கும் அந்த பள்ளியில் முதற்கட்டமாக 72 மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 19 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 9 மாணவர்களின் பெற்றோர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

அதனால் அப்பள்ளியில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 31 ஆக உயர்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் 12 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விடுமுறை அளிப்பதாக தொடர்பாக பள்ளி நிர்வாகம் மாவட்ட நிர்வாகத்துடன் ஆலோசத்து வருகிறது. பள்ளி மாணவர்கள் தொற்றால் பாதிப்பு அடைந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.